கரூர் முடிஞ்சது..அடுத்து காஞ்சிபுரம் மாடல்! விஜய் கையிலெடுத்த ப்ளான்! அடுத்து எந்த ஊரில் பிரச்சாரம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். வழக்கம் போல் விஜயின் பேச்சு எதிர்வினையை சந்தித்து இருந்தாலும் அங்கு வந்திருந்த மக்கள் கூட்டம் உள்ளிட்டவற்றால் உற்சாகமடைந்திருக்கும் விஜய், அடுத்தடுத்து தனது பயணத்தை தொடர திட்டமிட்டு இருக்கிறார். சேலம், நெல்லை, மதுரை,கன்னியாகுமரி என்ற வரிசையில் விஜயின் மக்கள் சந்திப்பு இருக்கும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு வெளியே வந்திருக்கிறார் விஜய். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த விஜய், அக்டோபரில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அதற்கு பிறகு இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.

இடையில் ஒரு சில நிகழ்வுகளை தவிர விஜய் எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டவில்லை. இதனால் ட்விட்டர் அரசியல்வாதி, அறிக்கை அரசியல்வாதி, ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனம் அவர் மீது முன் வைக்கப்பட்டது.

Vijay tvk tamilaga vettri kazhagam

விஜய் பிரச்சாரம்

2026 தேர்தல் தான் தனது இலக்கு என விஜய் கூறியிருந்தாலும் கட்சி ஆரம்பித்த பிறகு அது தொடர்பான எந்த விதமான அரசியல் நடவடிக்கைகளையும் விஜய் மேற்கொள்ளவில்லை. இந்த விமர்சனங்களை போக்கும் வகையில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்ட நிலையில், திருச்சியில் இருந்து அவரது பயணம் தொடங்கியது. ஆனால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் தான் விஜயின் பிரச்சார பயணம் தொடங்கியது. காலை 11 மணிக்கு பிரச்சாரம் என சொன்னாலும் விஜய் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த மரக்கடை பகுதிக்கு வருவதற்கு இரண்டு மணிக்கு மேலானது. அன்றைய தினம் மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேரமின்மையால் ஒரு மாவட்டத்தில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

கரூர் துயரம்

அதற்குப் பிறகு ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்கள் என விஜய் பிரச்சார திட்டம் மாற்றப்பட்டது. இருந்த போதும் கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகத்தினர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. இதற்கிடையே கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத அளவு 41 உயிர்கள் அந்த நெரிசலில் சிக்கி பலியானது. அன்று தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்கள் மக்கள் சந்திப்பு, ஊடகங்கள் சந்திப்பு ஆகியவற்றை தவிர்த்து வந்தார் விஜய். இடையில் இரண்டு அறிக்கை ஒரு வீடியோ என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

விஜய் மக்கள் சந்திப்பு

இதற்கிடையே மக்கள் மத்தியில் விஜய்க்கு கடும் எதிர்ப்பு அலை உருவாவதை உணர்ந்த தமிழக வெற்றி கழகம் பாதிக்கப்பட்ட மக்களை குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜயைசந்திக்க வைத்தது. இதுவும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் 55 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை இன்று தொடங்கி இருக்கிறார் விஜய். காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் இந்த சந்திப்பு நடந்தது. கரூர் சம்பவத்தை போல நடக்க கூடாது என பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் ஒரு ஆடியோ ரிலீஸ் விழா போலவே அரசியல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் நிகழ்வு

வழக்கமாக தலைவர்கள் மக்களைத் தேடி சந்திப்பார்கள். ஆனால் விஜயைத் தேடி மக்களை வரவழைத்து இருந்தார்கள் தமிழக வெற்றிக் கழகத்தினர். இருந்தபோதும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் உடனடியாக எதிர்வினை ஆற்றி உள்ளனர். இதனால் உற்சாகமடைந்திருக்கும் விஜய் அடுத்தடுத்து தனது பிரச்சார பயணத்தை காஞ்சிபுரம் பாணியிலேயே மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

காஞ்சிபுரம் நிகழ்வு

அடுத்ததாக சேலம், நெல்லை, மதுரை,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது தலைமை. அதே நேரத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு கூட இல்லாததால் அதிருப்தி அடைந்திருக்கும் விஜய், அதனை சரி செய்யுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவு பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி வரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிரச்சாரம் காஞ்சிபுரம் மாடல் போலவே இருக்கும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+