உங்க விஜய்க்கு ஹோட்டல் ரூம் கூட கிடைக்கலையா? ராஜீவ் காந்தி டெக்னிக்கை கையிலெடுக்கும் தவெக! என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் செப்டம்பர் 13-ம் தேதியை திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்க இருப்பது உறுதியாகியிருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு காரணங்கள் காட்டி அவரது பிரச்சாரத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் புதிய திட்டம் ஒன்றை விஜய் கையில் எடுத்திருக்கிறார். திருச்சியில் விஜய் தங்குவதற்குக் கூட ஹோட்டல் அறைகள் கிடைக்காத நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி போல அதிரடியாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகச் சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலத்திற்குள் இரண்டு மாநில மாநாடுகளைப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் விஜய். தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என 130-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சி சார்ந்த 130-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Vijay s Election Campaign from Trichy

தவெக விஜய்

விழுப்புரத்தில் முதல் மாநாடு, மதுரையில் இரண்டாவது மாநாடு என நடத்திய விஜய் பிரச்சாரத்தை மத்திய மண்டலத்தில் இருந்து துவங்குகிறார். திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் விஜய் பிரச்சாரத்தைத் தொடங்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் திருச்சி காவல்துறையில் அனுமதி கேட்டனர். திருச்சி மரக்கடை பகுதியில் இருந்து காந்தி மார்க்கெட், பால்பண்ணை மற்றும் சென்னை பைபாஸ் வரை ரோட் ஷோ நடத்த அனுமதி கேட்ட நிலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.

விஜய் பிரச்சாரம்

வேறு இரண்டு இடங்களில் பிரச்சாரம் நடத்தக் கேட்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கிடைத்த தகவலின்படி மரக்கடை அருகே எம்ஜிஆர் சிலை, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் ஆகிய பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்யலாம் எனச் சொல்லப்படுகிறது. பல இடங்களில் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதிக்காததால் தற்போது இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியைத் தரும் வகையில் திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகள் விஜய்க்கு அறை கூட ஒதுக்கவில்லை.

பிரச்சார திட்டம்

விஜய் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என பல ஹோட்டல்கள் கைவிரித்துவிட்டன. இதற்குப் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை அடுத்து, சென்னையில் இருந்து வரும் விஜய் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அன்று மீண்டும் சென்னை செல்கிறார். திருச்சியில் பிரச்சாரத்தை முடித்ததும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் விஜய் பிரச்சாரம் செய்வார் எனக் கூறப்படுகிறது. 100 நாட்களில் இந்தப் பிரச்சாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

ராஜீவ் காந்தி

இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களுடைய செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலும், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை விஜய் கையில் எடுத்திருக்கிறார். இது பழைய திட்டம்தான் என்றாலும், இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு பிரச்சாரத் திட்டம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிரச்சாரத் திட்டம்தான் அது. அதாவது, தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும் பகுதிகளில் அப்பகுதியில் உள்ள தொண்டர்களின் வீடுகளில் தங்க விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

தொண்டர்கள் வீடு

பிரச்சாரம் என்றால் தான் காவல்துறை அனுமதி மறுக்கும். தொண்டர்களின் வீடுகளில் தங்கினால் அனுமதி மறுக்க முடியாது என்பது விஜயின் திட்டம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தொண்டரின் வீட்டில் ஒரு நாள் விஜய் தங்க இருக்கிறார். இதைத்தான் 1980களில் ராஜீவ் காந்தியும் செய்திருந்தார். இது பற்றி பல வரலாற்று ஆசிரியர்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கின்றனர். தேர்தல் பிரச்சாரம் அல்லது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும் ராஜீவ் காந்தி திடீரென தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கிவிடுவார்.

தமிழ்நாடு

பொதுமக்களோடு நேரடியாகக் கலந்து பேசலாம், கட்சியின் தலைவராக இருந்தாலும் அடிப்படைத் தொண்டர்களின் வாழ்க்கையை உணர வேண்டும், அவர்களுடன் உணவு உண்டு உரையாடி குடும்ப சூழ்நிலை தெரிந்துகொள்ளலாம் என்பதுதான் ராஜீவ் காந்தியின் அந்தத் திட்டம். 1980 காலகட்டங்களில் குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அங்கு தங்கிய ராஜீவ் காந்தி அவர்களுடன் உணவருந்தி மகிழ்வார். அடுத்த நாள் இது தேசிய அளவில் செய்தியாகும்.

2026 தேர்தல்

"மக்களோடு கலக்கும் பிரதமர்" என்ற பெயர் அப்போது ராஜீவ் காந்திக்கு கிடைத்தது. இப்போது அந்த நடைமுறைகள் மிகவும் அரிதாகிவிட்டன. பாதுகாப்புக் காரணங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் அரசியல் தலைவர்கள் தொண்டர்களின் வீடுகளில் தங்கும் கலாசாரம் குறைந்துவிட்டது. ஆனால் ராஜீவ் காந்தி காலத்தில் இது ஒரு வெற்றிகரமான அரசியல் பாணியாகக் கருதப்பட்டது. தற்போது அதே பாணியைத்தான் 2026 தேர்தலையொட்டி விஜய் கையில் எடுக்க இருக்கிறார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+