எஸ்ஏசி கையில் துப்பாக்கியை கொடுத்த விஜய்! பொசுக்குனு போன புஸ்ஸி ஆனந்த் & கோ! தவிக்குது தவெக.. பரபர!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக நிர்வாகிகளை கண்காணிக்கும் வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 100 ஊழியர்களுடன் வார் ரூம் அமைத்திருந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜயை விட அவரது தந்தை எஸ்ஏசி தான் அந்த குழுவை முழுமையாக கண்காணிப்பார் எனவும், பொதுச் செயலாளர் தொடங்கி மாவட்ட நிர்வாகிகள் வரை கண்காணிப்பது தான் அவரது வேலை தமிழக வெற்றி கழகத்தினர்.
திமுக, அதிமுக என தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளும் 2026 தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிவிட்டன. ஒரு படி மேலே போய் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அரசியலின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தது.

மக்களை சந்திப்பது இல்லை என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மக்கள் சந்திப்பை திருச்சியில் தொடங்கினார். எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்தல் நிலையில் அடுத்தடுத்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை பிரச்சாரம் மேற்கொண்டார்.
விஜய் அரசியல்
ஆனால் எதிர்பாராத விதமாக கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விஜய்க்கு பின்னடைவாக அமைந்தது. இதை அடுத்து சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக முடங்கி இருந்த விஜய் தற்போது மீண்டும் அரசியல் களத்திற்கு திரும்பி இருக்கிறார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழுவுக்கு பிறகு விஜயின் அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனங்களும் நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவை விஜய் நியமித்திருந்தார். இந்த நிலையில் அந்த நிர்வாக குழுவின் மூலமாக தமிழகம் முழுவதும் இருக்கும் நிர்வாகிகளை கண்காணிப்பதற்கென்று பிரத்தியேக வார் ரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் நேரடி கண்காணிப்பில் இந்த குழு செயல்படும் எனவும், தமிழகம் முழுவதும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
வார் ரூம்
எல்லாவற்றிற்கும் மேலாக விஜய் இந்த குழுவை நேரடியாக கண்காணிப்பார் எனவும், 100 பணியாளர்களும் இரண்டு மாவட்ட செயலாளர்களை கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் இக்குழுவின் உண்மையான பின்னணி வெளியாகியிருக்கிறது. உண்மையில் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான் இந்த குழுவை கண்காணிப்பார் என சொல்கின்றனர். ஆரம்பத்திலிருந்து விஜயின் அரசியல் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தவர் ஏஸ்ஏசி தான். அவர்தான் விஜய் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அவர் அரசியலுக்கு வருவதற்கு அடிக்கல் நாட்டினார்.
எஸ்ஏ சந்திரசேகர்
ஆனால் இடையில் வந்த புஸ்ஸி ஆனந்த் எஸ்ஏ சந்திரசேகரை ஓரங்கட்டி விட்டு விஜய்க்கு நெருக்கமானார். ஏஸ்ஏசி விஜயை விட்டு விலகும் அளவுக்கு ஆனந்தின் செயல்கள் இருந்தது. இந்நிலையில் ரசிகர் மன்றத்திலிருந்து விஜய்யுடன் பயணித்தவர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இதற்கு இடையே ஆனந்தின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விஜய்க்கு புகார்கள் சென்ற நிலையில் கரூர் சம்பவத்தின் போது அவர் தலைமறைவானதும், மாவட்ட செயலாளர் மீது பழி போட்டது விஜய்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த்
இந்த நிலையில் ஆனந்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நிர்வாக குழுவை அமைத்ததோடு சந்திரசேகரையும் கட்சியில் முக்கிய பதவியில் அமர்த்த விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் முன்னேற்பாடாக தான் தற்போது விஜய் அமைத்திருக்கும் வார் ரூமை கண்காணிக்கும் பொறுப்பு விஜயின் தந்தையான எஸ்ஏ சந்திரசேகருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். புஸ்ஸீ ஆனந்தின் நடவடிக்கைகளால் ஒதுங்கி இருந்த சந்திரசேகர் தற்போது மீண்டும் களத்திற்கு வந்திருக்கும் நிலையில் சந்திரசேகரின் பழைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றபர். அதே நேரத்தில் ஆனந்தால் பதவி பெற்றவர்கள், இதுவரை அவரை கொண்டாடி வந்தவர்கள் திடீரென எஸ்ஏசந்திரசேகர் கொடுத்திருக்கும் எண்ட்ரியால் கலக்கம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications