Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் எப்போதும் அதிரடிக்கு பெயர் போனவர் அண்ணாமலை.. பாஜகவின் மாநில தலைவராக இருந்தபோது திமுகவிற்கு எதிராக அவர் நடத்திய அரசியல் ஒருபுறம் இருந்தாலும், அவருக்குள்ளேயே அமைக்கப்பட்ட "வார் ரூம்" நடவடிக்கைகள் இன்றுவரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான அந்தத் தனிப்பட்ட மோதல், இப்போது தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

தமிழக பாஜகவின் பரபரப்பு தலைவராக உருவானவர் அண்ணாமலை. அவரது அதிரடி பேச்சும், ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து களமாடிய அரசியலும் தமிழக பாஜகவை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தது. தமிழக பாஜக விற்காக அவர் அமைத்த வார் ரூம் இப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

Annamalai Edappadi K Palaniswami Vijay TVK Tamil Nadu Politics Coimbatore North Constituency War Room Tamil Nadu Assembly Election 2026 TN Election Special 2026

அண்ணாமலை - எடப்பாடி

இந்த நிலையில்தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, கடுமையான வார்த்தைகளில் அண்ணாமலை விமர்சித்தார். இதனால் அண்ணா மலை மீது தனிப்பட்ட முறையில் கோபத்தை வளர்த்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே, பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடியும் என பாஜகவின் தேசிய தலைமைக்கு அழுத்தமாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாராம்..

தங்களை மிக கடுமையாக எதிர்க்கும் திமுகவை இந்த முறை வீழ்த்த வேண்டுமானால் அதிமுக தயவுத் தேவை என திட்டமிட்டு, அதிமுகவின் கூட்டணிக்காக எடப்பாடி சொன்னதை செய்தது பாஜக தலைமை. மேலும், அண்ணாமலையை நீக்கி விட்டு எடப்பாடி விரும்பிய நயினார் நாகேந்திரனை தலைவராகவும் பாஜக நியமித்ததாக சொல்வதுண்டு.. இதனையடுத்தே எடப்பாடியின் கோபம் சற்றே தணிந்ததாம்.

இந்த நிலையில்தான், அண்ணாமலையின் அரசியலையும் அழிப்பேன் என எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக்கொண்ட திட்டம், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம்..

எடப்பாடி பழனிசாமி வியூகம்

ஆம்... சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவதற்கு தோதான தொகுதி யை ஒதுக்கீடு செய்யாமல் கடைசி வரை நேர்க்கோட்டில் நின்று தனது அடங்காத கோபத்தை எடப்பாடி தீர்த்துக்கொண்டுள்ளாராம்..

இதுகுறித்து அண்ணாமலை ஆதரவாளர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ''மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டபோது, டெல்லிக்கு அவரை அழைத்து பேசினார் அமித்ஷா.

அப்போது, "நீக்கம் குறித்து வருத்தப்படாதீர்கள். சட்ட மன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள். இந்த முறை நீங்கள் ஜெயிப்பீர்கள். சட்டமன்றத்துக்குள் நுழைந்து அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் எதிராக எந்த மாதிரி அரசியலையும் நீங்கள் கையிலெடுக்கலாம். உங்களுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும்னு சொன்னார் அமித்ஷா.

அண்ணாலையை கூல் செய்த அமித்ஷா

அவரின் இந்த வார்த்தைகள்தான் அண்ணாமலையை ஆறுதல் படுத்தி வந்துள்ளது.. அதனால் அமைதியாகவே இருந்தார். தேவைப்படுகிற நேரத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமியை புகழவும் செய்தார் அண்ணாமலை. .. மேலும் வரப்போகும் தேர்தலில் கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம் பாளையம் ஆகிய இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விரும்பி தொகுதிகளை தயார்படுத்தியும் வந்தார் அண்ணாமலை.

இது குறித்து கட்சியின் மேலிடத்திற்கு தகவலையும் அவ்வப்போது தந்து வந்தார்.. டெல்லியிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவும், தொகுதிகளை தயார்படுத்துவதில் நாங்கள் சீரியஸாகவே களமிறங்கினோம்..

ஆனால், தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. பாஜக விரும்பும் தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமிக்கு தரப்பட்டது. அந்த பட்டியலில், சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம், கோவை தெற்கு (வானதி சீனிவாசனின் தொகுதி) இருந்தன. யாருக்காக இந்த தொகுதிகள் கேட்கப்படுகின்றன என்பதை நன்றாகவே அறிந்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

அண்ணாமலைக்கு அரசியல் வாழ்க்கையே இருக்கக்கூடாது என எடப்பாடி கருதியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் எதிர்பார்க்கும் 2 தொகுதிகளையும் தரவே முடியாது என விடாப் பிடியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக சிட்டிங் தொகுதி

அண்ணாமலை எதிர்பார்க்கும் இந்த தொகுதிகளை மட்டும் எதிர்த்தால், அவருக்காகத்தான் செய்கிறோம் என அவர் அரசியல் செய்வார் என யோசித்த எடப்பாடி, பாஜகவின் சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு தொகுதியையும் தர முடியாதுன்னு பிடிவாதம் பிடித்து, மேற்கண்ட 3 தொகுதிகளையும் அதிமுக எடுத்துக்கொண்டுவிட்டு, கோவை வடக்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கி, அதற்கு பாஜகவை சம்மதிக்கவும் செய்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஆக, கோவை வடக்கு மட்டுமே பாஜகவுக்கு தரப்பட்டுள்ளது. தனக்கான தொகுதியை வாங்கித்தர கட்சி தலைமையால் முடியாத கோபமும் வருத்தமும் ஆதங்கமும் சேர்த்து தான், நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று தனது விரக்தியை வெளிப்படு த்தினார் அண்ணாமலை. இது, எங்கள் தலைமைக்கு அதிர்ச்சியை தந்தாலும், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

தவெகவில் அண்ணாமலை?

இந்த நிலையில், கோவை வடக்கு தொகுதியை கைப்பற்ற வானதி சீனிவாசன் முயற்சித்து வருகிறார். ஆனால், நாங்களோ, அண்ணாமலைக்கு இந்த தொகுதியை ஒதுக்கி எடப்பாடியின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம்.

அண்ணாமலையிடமும் இது குறித்து விவாதித்துள்ளோம். கோவை வடக்கில் அண்ணாமலையை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அண்ணாமலையின் ஆதரவாளர்களாகிய நாங்கள் வேறு முடிவை எடுக்க நேரிடும் '' என்று அண்ணமாலைக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி செய்த அரசியலை நம்மிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலையை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் நெருக்கமாக இருக்கும் 5 நபர்களில் ஒருவர், அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

கமலாலயம் ஹாட் டாபிக்

அதாவது, இந்த தேர்தலில் தாங்கள் போட்டியிடாத பட்சத்தில் நீங்கள் சீக்ரெட்டாக எங்களுக்கு உதவ வேண்டும். உங்கள் ஆதரவாளர்களை தவெகவை ஆதரிக்கச் சொல்ல வேண்டும். உங்களை பழிவாங்கும் எடப்பாடி பழனிச்சாமியை தோற்கடிக்க கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிக்க எங்களுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம்..

அண்ணாமலைக்கு போட்டியிட தொகுதி ஒதுக்க மறுத்த எடப்பாடிக்கு பாடம் புகட்ட வேண்டுமானால், கோவை வடக்கில் அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக தலைமை முன்வரவேண்டும் என்கிற அழுத்தம் அதிகரித்து வருகிறது. அண்ணாமலைக்காக எடப்பாடியை பகைத்துக்கொள்ள பாஜக தேசிய தலைமை விரும்புமா? என்பதுதான் பாஜகவில் விவாதிக்கப்படும் ஹாட் டாபிக் என்கிறார்கள் கமலாலயத்தார்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

- எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+