Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரில் பறந்த காலணி..அமித்ஷா காதுக்கு போன விஷயம்! அடடே மொத்த சீனும் மாறுதே! களமிறங்கும் கமாண்டோக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் விஜய் தரப்பு மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்க்கு பாதுகாப்பு குறைவு ஏற்பட்டதாக தவெக புகார் கூறியுள்ளது. இந்த நிலையில் விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், அதனை 'இசட்' ( Z) பிரிவு பாதுகாப்பாக மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தக் கூட்டத்தில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டதால், பொதுமக்களிடம் பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது,

அதே நேரத்தில்வ் விஜயின் பாதுகாப்பு குறித்தும் மிகுந்த கவலையை உருவாக்கியது. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பு நிலைமையை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது.

Vijay tvk Z Category

கரூர் கூட்ட நெரிசல்

மார்ச் மாதத்திலிருந்து விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி, 8 முதல் 11 போலீசாரும், சில CRPF கமாண்டோக்களும் அவரின் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த பாதுகாப்பு போதுமானதாக இருந்ததா, இல்லை என்பதை கரூர் சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியதாக தவெகவினர் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகள், கூட்டத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் காலணி வீச்சு சம்பவங்கள் ஆகியவற்றின் பின்னணி, விஜயின் பாதுகாப்பு முறைகள் மீதான கேள்விகளை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விஜய் பாதுகாப்பு

இந்த சூழலில், CRPF மற்றும் ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், விஜய்யின் பாதுகாப்பை Z பிரிவுக்கு மேம்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது. Z பிரிவு பாதுகாப்பு என்பது இந்தியாவில் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒரு உயர்நிலை பாதுகாப்பு அமைப்பாகும். இதில் 22 பேர் கொண்ட பாதுகாப்பு குழு இணைக்கப்பட்டு, அதில் 4-6 பேர் CRPF கமாண்டோக்கள் மற்றும் மற்றோர் போலீசார் இடம்பெறுவர். இந்த பாதுகாப்பு அமைப்பில் மொத்தம் 5 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Z பிரிவு பாதுகாப்பு

இதில் 1 குண்டு துளைக்காத வாகனம் மற்றும் 4 பிற பாதுகாப்பு வாகனங்கள் உள்ளன. இந்த பிரிவின் பாதுகாப்பு, எதிர்பார்க்கப்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவும், உயர் நிலையில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Z பிரிவுக்கான பாதுகாப்பு வழங்கப்படுவதால், விஜய்யின் பாதுகாப்பு நிலை முற்றிலும் உறுதி செய்யப்படும். கடந்த கரூர் சம்பவத்தின் போது ஏற்பட்ட குறைபாடுகள், புதிய அமைப்பின் மூலம் நிரந்தரமாக நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை

இதன் மூலம், எதிர்காலத்தில் நடக்கும் விஜயின் பிரசாரங்கள், கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான நிகழ்வுகளில் விஜய்க்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மத்திய உள்துறை, CRPF மற்றும் போலீசார் இணைந்து இந்த பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதால், அரசியல் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட முடியும். இதனால், மாநில அரசியலில் விஜய்யின் பிரசாரங்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடி தொடர்புகள் பாதுகாப்புடன் நடைபெறும் சூழல் உருவாகும் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+