டேமேஜ் கன்ட்ரோல்! கடவுளுக்கு பதில்.. 'உளமார' என்று சொல்லி பதவியேற்ற விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவோடு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட விஜய், ஆண்டவன் பெயரால் பதவியேற்றுக்கொண்டிருந்தார். இது விஜய்க்கு ஆதரவு கொடுத்த இடதுசாரிகளுக்கு அதிருப்தியளித்திருந்தது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்ட விஜய், உளமார என்று கூறி பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.

மதச்சார்பின்மையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதால்தான் விஜய்க்கு ஆதரவளித்ததாக இடதுசாரிகள் சொன்னார்களே! முதல்நாளே இதற்கு எதிர்மறையாக ஆண்டவன் பெயரால் விஜய் பதவியேற்றுக்கொண்டதை இடதுசாரிகள் வரவேற்கிறார்களா? என்று திமுக கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தது. இந்த பின்னணியில் தான் இன்று விஜய் உளமார என்ற சொல்லி பதவியேற்றதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Vijay TVK tamil nadu

முதல் நாள் ஏற்பட்ட டேமேஜை சரி செய்ய, விஜய் இன்று உளமார என்று சொல்லி பதவியேற்றிருக்கிறார்.

வழக்கமாக திமுகவினர் பதவியேற்கும்போது உளமார என்று சொல்லிதான் பதவியேற்பார்கள். இந்த ஆட்சியாளர்கள் கடவுளின் பெயரால் நடக்கும் மதவாத அரசை முன்னெடுக்க மாட்டோம், மதச்சார்பின்மை அரசாக இதை நடத்துவோம் என்பதற்கான வெளிப்படையான ஒப்புதல்தான் இந்த 'உளமார' என்கிற வார்த்தைக்கு அர்த்தம். அந்த வகையில் இன்று விஜய்யும் உளமார என்று சொல்லியே பதவியேற்றிருக்கிறார்.

விஜய்யை தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உளமார என்று சொல்லியே பதவியேற்றுக்கொண்டனர். ஆனால், அடுத்தடுத்த பதவியேற்ற தவெக எம்எல்ஏக்கள் கடவுளின் பெயரால் பதவியேற்பதாக கூறினர். செங்கோட்டையனும் அப்படியே சொல்லி பதவியேற்றார். அவர் தனது பாக்கெட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான் படத்தை வைத்திருந்தது கவனம் பெற்றிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+