200 கோடி சம்பளத்த விட்டுட்டு.. தமிழகம் முழுவதும் டூர்! விஜய்காக தயாரான 2 கோடி சொகுசு கேரவன்! மாஸ்!
சென்னை: நடிகர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார். மதுரை மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவில் விஜய்க்காக சொகுசு பேருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது. அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட இந்த பேருந்தில் தான் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ்நாடு அரசியல் களம் தற்போதே சூடாகி விட்டது. தமிழகத்தின் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஆட்சி அமைக்க முடியாது என்றாலும் கூட்டணியில் அதிகபட்ச சீட்டுகள், அதிகபட்ச எம்எல்ஏக்களை பெற வேண்டும் என பிற கட்சிகளும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.
திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, பாமக என தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் அதன் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தற்போதைய சூழலில் 2026 தேர்தலில் நான்கு முறை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியல்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. மேலும் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த ஐஜேகே, தமாக, தமமுக, உள்ளிட்ட கட்சிகள் இணையலாம். மேலும் பாமக, தேமுதிக கூட்டணிக்கு கொண்டு வரவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்
கடந்த தேர்தல்களில் மூன்றாவது இடத்தை பெற்ற நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்து தான் போட்டி என கூறிவிட்டது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டி என அறிவித்ததோடு அவ்வப்போது சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார். இதில் நான்காவதாக அடியெடுத்து வைத்திருக்கும் கட்சி தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம். கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்த நிலையில் விழுப்புரம் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது.
தமிழக வெற்றிக் கழகம்
தொடர்ந்து தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த விஜய் மதுரையில் இரண்டாவது மாநாட்டை நடத்தினர். எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் மாநாட்டில் திரண்டது. மேலும் மாநாடு முடிந்து பத்து நாட்கள் ஆகியும் விஜயை குறித்து தான் தமிழக அரசியலில் பேசி வருகின்றனர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள். இந்த நிலையில் சூட்டோடு சூடாக அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டார் விஜய். தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
விஜய் சுற்றுப்பயணம்
100 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கும் நிலையில் இதற்காக பெரிய அளவிலான பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக மாவட்ட செயலாளருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த். இதற்கிடையே விஜய் சுற்றுப் பயணத்திற்காக ஏற்கனவே பிரச்சார வேன் தயாராக இருக்கிறது. அதே நேரத்தில் நீண்ட தூர பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதிநவீன சொகுசு வசதிகளுடன் விஜய்க்கு ஒரு சொகுசு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை மட்டும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
Exclusive Video @TVKVijayHQ !!🔥🔥🔥 pic.twitter.com/YNdj0eC8IO
— JEGADESH TVK (@JegadeshTVK) August 31, 2025
சொகுசு பேருந்து
பிரபல நிறுவனத்திடம் இஞ்சின் மற்றும் சேஸை வாங்கி, சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்திடம் அதன் கட்டுமானத்தை முடிக்கும் பொறுப்பை கொடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். நவீன லிஃப்ட், ஓய்வறை, கழிப்பறை, சிறிய கிச்சன், படுக்கை, சோபா, மினி தியேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த பேருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நீண்டதொரு பயணங்களுக்கு இந்த பேருந்தை தான் விஜய் பயன்படுத்துவார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முன்பாக பிரச்சார வேனுக்கு விஜய் செல்வார் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். ஏற்கனவே விஜய் பயன்படுத்தி வந்த கேரவன்களை விட நீண்ட தூர பயணத்தை சமாளிக்கும் வகையில் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications