அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தா vs தெறி..ரீ ரிலீஸ் புதிய தேதியை அறிவித்த கலைப்புலி தாணு
சென்னை: விஜய்யின் தெறி படம் வரும் 23 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாகாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே அஜித்தின் மங்காத்தா திரைப்படமும் அதே 23 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகின்றது குறிப்பிடத்தக்கது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இதனால் விஜய்யை திரையில் கொண்டாட நினைத்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விஜய் ஜனநாயகன் தான் எனது கடைசி படம் என்று அறிவித்து இருந்ததால் ரசிகர்கள் பலரும் பலத்த எதிர்பார்ப்புடன் கடந்த 9 ஆம் தேதியை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தணிக்கை சான்று வழங்கக் கோரி படக்குழு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஜனநாயகன் படம் தான் ரிலீஸ் ஆகவில்லை. விஜய்யின் தெறி படத்தையாவது பார்த்துவிடலாம் என ரசிகர்கள் காத்திருந்தநிலையில் அந்த படமின் ரீ ரிலீசும் ஒத்திவைக்கப்பட்டது.
மற்ற தயாரிப்பாளர்கள் கோரிக்கையின் அடுத்து தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதியை கலைப்புலி எஸ் தானு ஒத்தி வைப்பதாக சொல்லியிருந்தார். இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி தெறி படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று கலைப்புலி எஸ் தானு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கான டிரெய்லரும் நாளை ரிலீஸ் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அஜித்குமாரின் மங்காத்தா படமும் வரும் 23 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் 23 ஆம் தேதி விஜய்யின் தெறி மற்றும் அஜித்தின் மங்காத்தா படங்கள் ரி ரிலீஸ் ஆகின்றனர். விஜய் அஜித் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவதால் அவர்களது ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவும் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வராத நிலையில் பராசக்தி படம் மட்டும் கடந்த 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் படத்திற்கு போதிய அளவு வரவேற்பு இல்லாததாலும், கலவையான விமர்சனங்கள் வந்ததாலும் அதனை தொடர்ந்து கார்த்தியின் வா வாத்தியார் படமும், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படமும் வெளியானது. ஜீவாவின் படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
-
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ












Click it and Unblock the Notifications