Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் என்ன ஊறுகாயா? ஆளாளுக்கு தொட்டுக்குறாங்களே! கூட்டணி பேரத்தை அதிகரிக்க தவெக? பரபர பாலிடிக்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக - காங்கிரஸ் கூட்டணி, தவெக- தேமுதிக கூட்டணி, தவெக - அமமுக கூட்டணியென கடந்த சில தினங்களாகவே தமிழக வெற்றிக் கழகத்தை சுற்றி பல்வேறு கூட்டணி கணக்குகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் கூட்டணிக்கு தயாராகி வருவது என்னவோ உண்மைதான். ஆனால் எந்த கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சை தொடங்கவில்லை. திமுக அதிமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்டு பெறுவதற்காக சில கட்சிகளே வான்டட் ஆக இது போன்ற வதந்திகளை கிளப்பி விட்டு வருவதாக கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க தீவிரமாக பணியாற்றி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

மறுபுறம் அடுத்தடுத்து இருமுறை ஆட்சியை இழந்ததில்லை என்ற சாதனையை தக்க வைக்கவும், 10 தோல்வி பழனிச்சாமி என்ற விமர்சனத்தை போக்கவும் தீவிரமாக முயன்று வருகிறார் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

Vijay TVK DMK

தமிழக சட்டசபை தேர்தல் 2026

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஆழமாக காலூன்ற வேண்டும் என பாஜக, அதிமுக கூட்டணியிலும், தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என திமுக கூட்டணியில் காங்கிரஸும் இருக்கின்றன. இப்படி பிரதானமாக இரு கட்சிகள் களத்தில் இருக்கும் நிலையில், நாம் தமிழர் தனித்து தான் போட்டியிடும் என்பது உறுதியாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

தமிழக வெற்றிக் கழகம்

இந்த நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தோடு கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது தமிழக வெற்றி கழகம். தற்போதைய சூழலில் அதிமுக, திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியிலிருந்த சிறிய கட்சிகள் இணைந்து இருக்கிறது.

தேமுதிக பாமக கூட்டணி

அதே நேரத்தில் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் முக்கியமானவையாக இருக்கும் தேமுதிக, பாமக, யார் பக்கம் செல்ல போகிறது என தெரியவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்படி பாஜக அதிமுக கூட்டணியிலேயே தேமுதிகவும் பாமகவும் இணையலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே அவ்வப்போது காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க போகிறது, பிரேமலதா விஜயகாந்த் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்து வருகின்றன.

விஜய் கூட்டணி வதந்தி

குறிப்பாக சில கட்சியினர் தொலைக்காட்சி விவாதங்களை கூட இதையே திரும்பத் திரும்ப பேசி வருகின்றனர். மேலும் 2026ல் விஜய் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. உண்மையில் விஜய் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை, கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் அதிருப்தியாளர்களிடம் தான் பேசி வருகிறாராம். கூட்டணி தொடர்பாக எந்த முடிவாக இருந்தாலும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் பார்த்துக் கொள்ளலாம் என விஜய் கூறிவிட்டார்.

தமிழக கூட்டணி அரசியல்

இந்த நிலையில் ஜனவரிக்குள் கூட்டணி பேச்சு வார்த்தைகளை உறுதி செய்து தொகுதி பங்கீட்டை முடித்துவிட வேண்டும் என திமுகவும் அதிமுகவும் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி பேரத்தை அதிகரிக்கவே விஜய் பேரை சில கட்சிகள் பயன்படுத்தி வருவதாகவும், கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதாக அவர்கள் கிளப்பி விட்டு வருகிறார்கள் என்கின்றனர் நம்மிடம் பேசிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+