சைலாண்டா இருந்தே சாதிச்சுட்டாரே! சத்தமில்லாமல் வேலையைப் பார்த்த விஜய்! அடுத்த வாரம் அதகளம் தான்!
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கட்சித் தலைவரான நடிகர் விஜய் தலைமையில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பிப்ரவரி 2-ம் தேதி தவெகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.
தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், தவெக இந்த தேர்தலை மிகவும் முக்கியமானதாகக் கருதி செயல்பட்டு வருகிறது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற உறுதியுடன், விஜய் தேர்தல் யுக்திகளை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள 'விசில்' சின்னத்தை, கட்சியின் அடையாளமாகவும், முக்கிய பிரச்சார ஆயுதமாகவும் மாற்ற தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகளும் தனியே நடைபெற்று வருகிறது.
விஜய் தவெக
தேர்தல் பிரச்சாரத்தை எங்கு தொடங்குவது என்பது குறித்தும் கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மதுரை, கன்னியாகுமரி, நெல்லை அல்லது தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கலாம் என கூறப்படுகிறது. தென் தமிழ்நாட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குவது, கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
வேட்பாளர் தேர்வு தொடர்பாக, ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் அடங்கிய ஆரம்ப பட்டியலை தவெக தலைமை ஏற்கனவே தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, போட்டியிட விருப்பம் தெரிவித்து வரும் நபர்களின் முழுமையான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் சமூக பின்னணி, அரசியல் அனுபவம், மக்கள் தொடர்பு, உள்ளூர் செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தவெக வேட்பாளர் பட்டியல்
இந்த பணிகள் முடிவடைந்ததும், தகுதியான வேட்பாளர்களை நேரடியாக நேர்காணல் செய்யும் திட்டமும் தவெக தலைமையின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நேரடியாக வேட்பாளர்களை சந்தித்து அவர்களின் அரசியல் பார்வை மற்றும் மக்கள் பணியில் ஈடுபாடு குறித்து கேட்டு அறிந்து முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தல் 2026
கட்சியின் அரசியல் பாதையில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த முதல் கட்ட பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி அளவில் செல்வாக்கு பெற்றவர்கள், சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தவெக மிகத் தீவிரமான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில், பிப்.2-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர் பட்டியல் தமிழக அரசியலில் நிச்சயம் புதிய விவாதங்களை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் தவெகவினர்.
-
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்












Click it and Unblock the Notifications