விஜய்யின் தாய் செய்த சம்பவம்.. மிஸ்ஸான முதல் முயற்சி! விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை இன்று அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றார். விஜய்க்கு நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரிய சங்கீதா திடீரென்று மனம் மாறி வழக்கை வாபஸ் பெற்றது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் முதல்வர் விஜய்யின் தாய் ஷோபா தான் என்று கூறப்படும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

vijay-sangeetha-divorce-case-withdrawn-how-did-vijay-mother-shobha-helps-details-here

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து சட்டசபை தேர்தலில் வென்று முதல்வராகி உள்ளார் விஜய். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் விஜய் தீவிரமாக இருந்த சமயத்தில் தான் அவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தான் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த மனு மீது ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதற்கட்டமாக விசாரணை நடந்தது. அதன்பிறகு ஜூன் மாதம் 15ம் தேதி 2வது கட்டமாக விசாரணை நடந்தது. அதன்பிறகு வழக்கு ஆகஸ்ட் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று 3வது கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதி சுஜாதா வழக்கை விசாரித்தார். இன்று சட்டசபை கூட்டத்தொடர் உள்ளதால் விஜய் தரப்பில் வழக்கை ஒத்திவைக்க கூறப்பட்டது. ஆனால் நீதிபதி சுஜாதா அனுமதிக்கவில்லை.

அதேவேளையில் ஆன்லைனில் ஆஜராக அனுமதி வழக்கு விசாரணையை மதியத்திற்கு ஒத்திவைத்தார். மதியம் விசாரணை தொடங்கியது. சங்கீதா ஆன்லைனில் தோன்றி நீதிபதி சுஜாதாவிடம் தன் தரப்பு விஷயங்களை 15 நிமிடங்கள் வரை முன்வைத்தார். அப்போது வழக்கை வாபஸ் பெறுவதாகவும் கூறினார்.

இதற்கு விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற சங்கீதாவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி, வழக்கை முடித்து வைத்தது. இதனால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

இந்நிலையில் தான் நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு உள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து கோரிய நிலையில் திடீரென்று அவர் மனம் மாறி வழக்கை வாபஸ் பெற்றது எப்படி? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது யாரென்றால் முதல்வர் விஜய்யின் தாய் ஷோபா தான் என கூறப்படுகிறது. ஷோபா தான் விஜய், சங்கீதா ஆகியோரை சமாதானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் - சங்கீதா விவாகரத்தை தொடக்கம் முதலே ஷோபா விரும்பவில்லை.

விஜய் - சங்கீதா தம்பதிக்கு மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷா என்ற மகள்கள் உள்ளனர். இதனால் அவர்களின் விவாகரத்து வழக்கு இருவரின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று ஷோபா நினைத்தார்.

அதோடு நடிகர் என்பதை தாண்டி அரசியல் பொதுவாழ்க்கைக்கு விஜய் வந்துள்ள நிலையில் அவரது எதிர்காலம் பாதிக்கலாம் என்று ஷோபா கருதினார். இதனால் தொடக்கம் முதலே ஷோபா, மகன் விஜய், மருமகள் சங்கீதாவிடம் பேசி சமாதானம் செய்ய முயன்று வந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் எப்படியாவது இருவரையும் சமாதானம் செய்ய வேண்டும். ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளுக்குள் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஷோபா நினைத்தார்.

இதுதொடர்பாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் ஷோபா தனது முயற்சியை கைவிடாமல் சங்கீதா மற்றும் அவரது தரப்பை சமாதானம் செய்து வைத்துள்ளதும், அதன்பிறகே விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரும் முடிவை சங்கீதா கைவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+