விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்! எங்க தளபதிக்கு நாங்கதான் செய்வோம்! பேட்டியில் அதிர வைத்த ரசிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவரது மனைவி சங்கீதா இடையிலான 27 வருட மணவாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது. விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் சங்கீதா. இந்த நிலையில் விஜயை விட்டு யார் வேண்டுமானாலும் செல்லட்டும், 'அக்காவாக, தங்கையாக ஏன் பொண்டாட்டியாக கூட தளபதிக்காக நாங்கள் இருப்போம்' என ரசிகை ஒருவர் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

நடிகரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அவரது மனைவி சங்கீதா திருமண வாழ்வை முடித்து வைக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அபிடவிட் முழுமையாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijay sangeetha divorce

விஜய் குடும்ப சர்ச்சை

அவர் தாக்கல் செய்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் தாக்கல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 27 ஆண்டுகளாக நீடித்த மணவாழ்க்கைக்கு பின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண். லண்டன் நகரத்தில் வாழ்ந்த அவர், விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து பின்னர் வாழ்க்கைத்துணையாக மாறியவர்.

விஜய் விவாகரத்து

1996ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்பட வெற்றிக்குப் பிறகு விஜய்யை நேரில் சந்தித்ததே இவர்களின் அறிமுகமாக இருந்தது. அதன் பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கையை விஜய் பொதுமக்கள் கவனத்திலிருந்து விலக்கி வைத்திருந்தார். இந்நிலையில், சமீப காலமாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது குறித்து பல்வேறு ஊகங்கள் பரவியது.

சங்கீதா விஜய் பிரிவு

இந்த நிலையில் தான், தற்போது விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், திருமண உறவை மீறும் வகையில் நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொடர்பு காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், பல ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் தன்னையும் குழந்தைகளையும் பாதித்ததாகவும், தனக்கான உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

விஜய் தனிப்பட்ட வாழ்க்கை

சங்கீதாவின் மனுவில், சம்பந்தப்பட்ட நடிகையின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், தேவையான சூழலில் அதை வெளிப்படுத்துவேன் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு மிகப்பெரும் திரை பிரபலமாக இருந்து அரசியலுக்கு விஜய் வந்திருக்கும் நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதம் சமூக வலைதளங்களிலும் அதிகமாக இருக்கிறது. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரது அரசியலையும் விமர்சித்து வருகின்றனr.

விஜய் தனிப்பட்ட வாழ்க்கை

இது ஒரு புறம் இருக்க விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தினரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விமர்சிப்பது தவறும் என்றும் சொல்கின்றனர். இதற்கிடையே பெண் ரசிகை ஒருவர் கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விஜய் ரசிகை பேட்டி

ஆனால் அது எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை? தற்போது விஜய் விவாகரத்து விவகாரம் பொதுவெளிக்கு வந்திருக்கும் நிலையில் அவரது பேட்டி கடும் எதிர்வினைகளை சந்தித்துள்ளது. தனியார் சேனல் ஒன்றியிடம் பேசிய அந்த இளம் பெண்," விஜய்யை விட்டு யார் வேண்டுமானாலும் செல்லட்டும்.. நாங்க இருக்கிறோம்.. அக்காவாக தங்கச்சியாக ஏன் பொண்டாட்டியா கூட இருப்போம். தளபதி கூட நாங்க நிற்போம்" என அவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+