நடிகையுடன் கள்ளஉறவில் விஜய்! 2021ல் தெரிந்தும் சங்கீதா விவாகரத்து மனுவை தாமதமாக்கியது ஏன்? விளக்கம்
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் 2021ம் ஆண்டிலேயே விஜய் நடிகையுடன் கள்ள உறவில் இருப்பது தெரிந்தும் மனைவி சங்கீதா தாமதமாக மனுத்தாக்கல் செய்திருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சங்கீதா தனது விவாகரத்து மனுவில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் கவனம் செலுத்துவதாக விஜய் அறிவித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். இதற்கான பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
நடிகையுடன் கள்ளத்தொடர்பு
விவாகரத்து மனுவில் விஜய்க்கு, நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது. இதனை கைவிட கூறியும் விஜய் மறுத்துவிட்டார். மேலும் தனக்கு மனரீதியாக தொல்லைகள் தந்தார். இதனால் விவாகரத்து கோருகிறேன் என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
அதோடு மனுவில் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதை கண்டுபிடித்தேன். நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டில் இதை கண்டுபிடித்தேன் என்பதையும் சங்கீதா கூறியுள்ளார்.
தாமதம் ஏன்?
இந்நிலையில் தான் பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. 2021ம் ஆண்டிலேயே விஜயின் கள்ள தொடர்பை கண்டுபிடித்த சங்கீதா, இப்போது கட்சி தொடங்கி தேர்தல் நெருங்கும்போது விவாகரத்து கோருவது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சங்கீதா தனது மனுவில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மனுவில், ''நடிகை ஒருவருடன் விஜய்க்கு கள்ளத்தொடர்பு இருப்பதை கடந்த 2021ம் ஆண்டில் கண்டுபிடித்தேன். கள்ள உறவை கண்டுபிடித்ததால் அதனை கைவிடுவதாக விஜய் கூறினார். ஆனால் அவர் கூறியது போல் நடந்து கொள்ளவில்லை. விஜய் தனது செயலுக்காக ஒருபோதும் வருந்தவில்லை. மாறாக மனைவி என்ற முறையில் நான் அனுபவித்த வசதிகளை நிறுத்திவிட்டார். எனக்கு மனஉளைச்சல் தர வேண்டும் என்பதற்காகவே விஜய் விலகி சென்றார்.
கவுரவமாக பிரிய...
பிரச்சனையின்றி கவுரவமாக இருவரும் பிரிய வேண்டும் என்று நினைத்தேன். இதற்கான முயற்சிகளை செய்தேன். 2021 செப்டம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை வழக்கறிஞர் மூலமாக சமூகமாக பிரிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம். வழக்கறிஞர் வழியாக இருதரப்பிலும் பேசி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. தீர்வும் கிடைக்கவில்லை. சுமூகமாக பிரிய 2 முயற்சிகளை முன்னெடுத்தேன். கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி விஜயை சந்திக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால் நடக்கவில்லை.
எனது மகன், மகளின் கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விவாகரத்தை தள்ளிப்போட்டேன். ஆனால் இப்போது நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை'' என கூறியுள்ளார். மேலும் ''கள்ளஉறவில் இருக்கும் நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சேர்ந்து சென்றார். திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.
நடிகையுடன் தொடரும் உறவு
விஜய் எனக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். பணம் செலவு செய்ய விடாமல் தடுத்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. திருமண வாழ்க்கையில் என்னை ஒதுக்கிவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார்.
நடிகையும், விஜயுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது மன உளைச்சலை தந்தது. தேவையென்றால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன்'' என்றார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications