விஜயால் மனைவி சங்கீதாவுக்கு நேர்ந்த கொடுமை.. விவாகரத்து மனுவில் இருக்கும் ஷாக் தகவல்.. 10 பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மார்ச் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் விஜய் மீது மனைவி சங்கீதா தனது விவாகரத்து மனுவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதனை 10 பாயிண்ட்டுகளில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது.

vijay-sangeetha-divorce-why-did-sangeetha-seeks-divorce-from-vijay-top-10-points-here

இந்நிலையில் தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மார்ச் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

10 பாயிண்ட்

இந்த மனுவில் விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த மனுவில் விவாகரத்துக்கான காரணத்தையும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிய முக்கிய 10 பாயிண்ட்டுகளின் விவரம் இங்கு வருமாறு:

நடிகையுடன் கள்ளஉறவு

1. திருமண வாழ்க்கை தொடக்கத்தில் இனிமையாகவே சென்றது. ஆனால் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதை கண்டுபிடித்தேன். நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டில் இதை கண்டுபிடித்தேன்

2. கள்ள உறவை கண்டுபிடித்ததால் அதனை கைவிடுவதாக விஜய் கூறினார். ஆனால் அவர் கூறியது போல் நடந்து கொள்ளவில்லை. தொடர்ந்து நடிகையுடன் தொடர்பில் இருந்தார்.

கட்டுப்பாடு விதித்த விஜய்

3. திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளை விதித்தார். பணம் செலவிடாமல் தடுத்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் நம்பிக்கையை மீறுவதற்கு சமம் என நினைத்தேன்.

4. திருமண வாழ்க்கையில் என்னை ஒதுக்கிவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார். இது மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

தாம்பத்தியத்தில் விலகல்

5. விஜய் தனது செயலுக்காக ஒருபோதும் வருந்தவில்லை. மாறாக மனைவி என்ற முறையில் நான் அனுபவித்த வசதிகளை நிறுத்திவிட்டார். எனக்கு மனஉளைச்சல் தர வேண்டும் என்பதற்காகவே விஜய் விலகி சென்றார். தாம்பத்திய வாழ்க்கையில் விலகினார்.

6. 2021ல் இருந்து விஜய் வார்த்தைகளால் அவமானப்படுத்தினார். என்னை புறக்கணிக்க தொடங்கினார். குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதற்காக விவாகரத்து கோருவதை தள்ளிவைத்தேன்.

7. கணவன் - மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். இது பெரும் கவலையையும், மனஉளைச்சலையும் தந்தது.

நடிகை பெயர் சொல்லாதது ஏன்?

8. விஜயுடன் தொடர்புடைய நடிகையை அவமதிக்க கூடாது என்பதால் அவரது பெயரை தற்போது குறிப்பிடவில்லை. தேவை என்றால் 2வது பிரதிவாதியாக சேர்ப்பேன்.

9. சுமூகமாக பிரிய நான் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. விஜய் பிடிகொடுக்காததால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளேன்.

10. இப்படியாக விஜயின் மனைவி சங்கீதா மொத்தம் 12 பக்கங்களில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை குறிப்பிட்டு விஜயிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+