"சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்! நீலாங்கரை வீட்டில் வாழ விஜய் தடுக்கிறார்!" சங்கீதா குற்றச்சாட்டு
சென்னை: "சென்னையில் எனக்கென வீடின்றி தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார்" என சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே விவாகரத்து வழக்கில் விஜய் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில் சங்கீதா புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார். அந்த வீட்டில் எனக்கும் சரி பங்கு இருக்கிறது என சங்கீதா தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: நீலாங்கரை வீட்டில் நான் வசிக்க விஜய் அனுமதிக்க மறுக்கிறார். பிரிட்டன் குடியுரிமை கொண்ட எனக்கு சென்னையில் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்ப வீடு இல்லை. எனவே விவாகரத்து முடியும் வரை நீலாங்கரை வீட்டிலேயே நான் தங்க அனுமதிக்க வேண்டும்.
அந்தஸ்து
இல்லாவிட்டால் அவர் அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு வீட்டில் என்னை தங்க வைக்க வேண்டும். விவாகரத்து முடியும் வரை எனக்கு விவாகரத்துக்கு பிறகு நான் வேறு ஒரு வீட்டிற்கு சென்றுவிடுகிறேன். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சங்கீதா விவாகரத்து
கடந்த வாரம் பிப்.28 ஆம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் விஜய்யுடன் எனக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.
2021 ஆம் ஆண்டு தெரிந்தது
அதன் பின்னர் அவருக்கும் ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை நான் 2021 ஆம் ஆண்டு அறிந்தேன். இது குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் அந்த நடிகையை விட்டுவிடுவதாக தெரிவித்தார்.
கள்ளத்தொடர்பு
ஆனால் அந்த நடிகையுடன் அவர் இன்று வரை கள்ளத்தொடர்பில் இருந்து வருகிறார். அவரை நம்பிய எனக்கு துரோகம் செய்துவிட்டார். என்னை மன ரீதியாக துன்புறுத்துகிறார். என்னை ஒதுக்கிவைத்துவிட்டு அந்த நடிகையுடன் வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
அவமானம்
அவ்வாறு அவர் செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை அந்த நடிகை சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுகிறார். இது எனக்கும், என் குழந்தைகளுக்கும் அவமானத்தை தருகிறது. எனவே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும். மேலும் கணவரின் இமேஜை கருத்தில் கொண்டு அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை சொன்னது என்ன
இதுகுறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது: "இந்த விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்றாலும் நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சங்கீதா போன்றோருக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும். அவர் சிரமத்தில் இருப்பதாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் " என தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவுடன் விஜய் சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர்கள் இருவரும் ஒரே நிற ஆடை அணிந்திருந்தனர். இந்த நிலையில் சங்கீதா தனது புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மகளிர் தினம்
நாளை மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் தவெக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் விஜய் மீது சங்கீதா இப்படிப்பட்ட புகாரை அளித்திருக்கிறார்.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications