விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு.. சங்கீதாவிடம் விவாகரத்து பெற்றால் ஜீவனாம்சம் எத்தனை கோடி கொடுக்கனும்?
சென்னை: நடிகையுடன் தொடர்பு இருப்பதாலும், என்னை மன ரீதியாக தொந்தரவு செய்ததாலும் விஜய்யிட விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா நீதிமன்றத்தை நாடியுள்ளார். விஜய்யிடம் ஜீவனாம்சம் கோரியுள்ள நிலையில், விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தொடர்பான விவாதங்கள் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், 27 ஆண்டுகள் மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் மீது மனைவி புகார்
விஜய் நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாகவும், தன்னை அலட்சியப்படுத்தியதகவும் விவகாரத்து மனுவில் சங்கீதா கோரியுள்ளார். மேலும் விஜய்யின் சமூக அந்தஸ்து வருமானத்திற்கு ஏற்றவாறு அவரிடம் இருந்து நிரந்தர ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என்றும் தனது மனுவில் சங்கீதா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராகவும், அரசியலில் கால் பதித்துள்ள விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் வீசியுள்ள இந்த புயல், சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தொடர்ந்துள்ள இந்த மனு ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது.
விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு
அன்றைய தினமும் இரு தரப்பும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விஜய்யிடம் ஜீவனாம்சம் கோரியுள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தொடர்பான விவாதங்கள் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளன.
ஒரு படத்திற்கு சுமார் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கு விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.600 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீலாங்கரை பங்களா, முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, ஆடி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் அவரிடம் உள்ளன.
சொத்தில் 50 சதவீதம் அளிக்கப்படும்
சங்கீதா - விஜய் விவாகாரத்து உறுதியானால், விஜய் எவ்வளவு தொகை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டியிருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலை நாடுகளில் விவாகரத்தின் போது ஜீவனாம்சம் தொகையாக சொத்தில் 50 சதவீதம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படியான ஒரு விதி இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 25-ன் கீழ், ஜீவனாம்சமாக "நியாயமான மற்றும் பொருத்தமான" தொகையை நிர்ணயிக்க நீதிமன்றத்தால் முடியும். சில சந்தர்ப்பங்களில், மாத வருமானத்தில் 25% வரை பராமரிப்பு தொகையாக கொடுக்கப்படுகிறது. ஆனால் இதுவும் கட்டாயம் அல்ல.
ரூ.380 கோடி வழங்கிய ஹிருத்திக் ரோஷன்
ஒவ்வொரு வழக்கிற்கும் இது மாறுபடும் என்று சொல்லப்படுகிறது. கணவரின் வருமானம், சொத்துகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 5ல் ஒரு பங்கு, மூன்றில் ஒரு பங்கு என பல்வேறு வரம்புகளில் வழங்கப்படலாம்.
இதில் நீதிமன்றம் பல்வேறு பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கும் என்பதால் எவ்வளவு தொகை வழங்க உத்தரவிடும் என்பது உறுதியாக கணிக்க முடியதே என்பதே சட்ட நிபுணர்கள் கருத்தாக உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவியை பிரிந்த போது ரூ.380 கோடியை ஜீவனாம்சமாக கொடுத்தார்.












Click it and Unblock the Notifications