விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனி பாதுகாவலர் வைத்திருந்த எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் பேசுகிறாரா அதிமுக எம்.பி
இன்பதுரை? என கேள்வி எழுப்பியுள்ள தவெக பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் அமைச்சராக உள்ள ஒருவர் அரசால் தனக்கென ஒதுக்கப்படும் அரசு ஊழியர்கள் போக, தேவைப்படும் பட்சத்தில் தனி உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வெளியாட்களை நியமித்துக் கொள்ளவும் கூட அரசு விதிகள் அனுமதிக்கிறது என கூறியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவரது பாதுகாவலராக நயீம் மூஸா பணியாற்றி வருகிறார். விஜய் கட்சி மாநாட்டின் போதும் பிற நிகழ்வுகளின் போதும் இவருக்கு தான் விஜய் பாதுகாப்பு அளிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

துபாயில் பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் விஜயுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு அவரது முதன்மை பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Vijay TVK

நயீம் மூஸா

ஆனாலும் நயீம் மூஸா தான் அவரது முதன்மை பாதுகாவலராக சென்று வருகிறார். டெல்லி பயணத்திலும் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக எம்பி ஆன இன்பத்துரை. இதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தார். கோர் செல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வளையங்கள் உள்ள அதிகாரப்பூர்வ பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலன் வலம் வருவது ஏன்? மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பி இருந்தார்.

டாக்டர் சரவணன்

இந்நிலையில், தனி பாதுகாவலர் வைத்திருந்த எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் பேசுகிறாரா அதிமுக எம்.பி இன்பதுரை? என கேள்வி எழுப்பியுள்ள தவெக பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி விஜய் அவர்களுடன் அவரது மெய்காவலர் நயீம் அவர்கள் செல்வது அரசு விதிமுறைகளுக்கு முரணானது எனவும், core cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டும் முதலமைச்சர் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன் எனவும், மாநில அரசின் காவல்துறை மீது முதலமைச்சருக்கு நம்பிக்கை இல்லையா எனவும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் எந்த அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார் எனவும் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஐ‌.எஸ்.இன்பதுரை சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எம்ஜிஆர்

அதிமுகவின் நிறுவனரும், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1977 இல் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் 1987 இல் அவர் மறையும் வரை திரு.கே.பி.ராமகிருஷ்ணன், எம்.கே.தர்மலிங்கம், என்.சங்கர், முத்து, நாடார் சிங் ஆகிய ஐந்து பேரை தனது தனிப்பட்ட பாதுகாவலர்களாக வைத்திருந்தார்.

இன்பதுரை

கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த ஐவரில் ஒருவர் அவரது அருகில் இருப்பார் என்பதை அதிமுகவின் வரலாறு அறிந்த தலைவர்கள் முதல் சாமானிய தொண்டர்கள் வரை அறிந்த இந்தச் செய்தியை அதிமுகவின் எம்.பி.யாக உள்ள இன்பதுரைக்கு தெரியாதது வியப்பாக உள்ளது.

தனிப்பட்ட பாதுகாவலர்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய பாதுகாப்பில் அரசை விட தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கே முன்னுரிமை தந்த செய்திகளை அவரது மெய்காவலர்களில் ஒருவரான திரு.கே.பி.ராமகிருஷ்ணன் எழுதிய 'எம்ஜிஆர் ஒரு சகாப்தம்' எனும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார். இன்பதுரை போன்றோர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

அரசு ஊழியர்கள்

அமைச்சராக உள்ள ஒருவர் அரசால் தனக்கென ஒதுக்கப்படும் அரசு ஊழியர்கள் போக, தேவைப்படும் பட்சத்தில் தனி உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வெளியாட்களை நியமித்துக் கொள்ளவும் கூட அரசு விதிகள் அனுமதிக்கிறது என்பதையும் இன்பதுரை போன்றோர் நினைவில் கொள்ள வேண்டும்.

விஜய்

மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களை விமர்சிக்க நினைத்து மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வகையில் இன்பதுரை எழுப்பியுள்ள கேள்விகள் மாண்புமிகு எம்ஜிஆர் எனும் மாமனிதரையும் இழிவு படுத்தும் கேள்விகள் என்பதை இன்பதுரை உணர்ந்து கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+