விவாகரத்து கேட்கும் சங்கீதா.. ஜூன்.15ல் விஜய் நேரில் ஆஜராக குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கீதா தொடுத்திருந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன்.15ல் விஜய்-சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக, நேரில் ஆஜராவதற்கு பதில் ஆன்லைன் மூலம் ஆரஜாக அனுமதியளிக்க வேண்டும் என்று விஜய் தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.

Vijay Sangeetha TVK

விஜய் திருமணத்தை மீறி, நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று அவரது மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இன்று மனு மீது விசாரணை நடைபெற இருந்தது. விசாரணைக்காக, விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதாலும், விஜய் தனது கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாலும், அவரால் நேரில் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

எனவே, ஆன்லைன் வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி கோரி விஜய் தரப்பில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான காரணமாக தேர்தல் பணிகளை விஜய் தரப்பு குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில், ஜூன்.15ம் தேதி, இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

வழக்கின் பின்னணி

கடந்த பிப்ரவரி 24, 2026 அன்று சங்கீதா தரப்பில் இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இவர்கள் பிரிய முடிவெடுத்திருப்பது திரையுலகிலும் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய் குறிதது சங்கீதா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரவலாக கவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+