ஆஹா இது போன்றதொரு அரசியலை நான் ரொம்ப நாளாக பார்த்ததே இல்லை.. ஸ்டாலினுக்கு விஜய் சேதுபதி பாராட்டு
சென்னை: இது போன்றதொரு அரசியலை நான் பார்த்ததே இல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்துகிறார் என விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து விஜய் சேதுபதி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் சட்டசபையில் நடைபெறுவதை எல்லாம் நான் வீடியோவில் பார்ப்பேன். அது போல் யூடியூபிலும் பார்ப்பேன்.
அது மிகவும் நல்லாயிருக்கு. எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. நிறைய பேருக்கு மிகவும் பிடிச்சிருக்கு. அந்த வீடியோக்களுக்கு கீழ் பிறர் போடும் கமென்டுகளை பார்ப்பேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பேசுவது எல்லாமே மிகவும் நல்லாயிருக்கு. ஆரோக்கியமானதாக இருக்கு. இந்த முறை எல்லோரையும் நான் கேட்டிருந்தேன். அவருக்கு ஆதரவு இருக்கிறது. அண்மையில் சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. விளையாட்டு வீரர்களுக்கு ரூ 3 கோடி வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இது போன்ற அரசியலை நான் ரொம்ப நாளாக பார்த்ததில்லை.

அம்மா உணவகம்
திமுக கட்சியினரே அம்மா உணவகத்தை அடித்து உடைத்த போது கூட அதை திரும்ப சரி செய்ய வேண்டும் என்று கூறிய முதல்வர் அவர்களை சிறையில் வைத்து கட்சியிலிருந்து விலக்கியது மிகவும் அற்புதமான விஷயமாகும். அதை ஏன் உடைக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி இருக்கிறது இல்லையா? அது அங்கு வந்தவுடனே மக்களுடைய இமேஜை கெடுத்து விடுகிறது. எனவே உடனே தலையிட்டு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.

பை வழங்குவது
அது போல் பள்ளி மாணவர்களுக்கு பை வழங்குவதில் முந்தைய ஆட்சியாளர்களின் படத்தை நீக்கி புதிதாக பை போட்டால் ரூ 13 கோடி கூடுதல் செலவாகும் என்பதால் பரவாயில்லை கடந்த ஆட்சியாளர்களின் படத்துடன் பையை கொடுத்துவிடுங்கள் என கூறியுள்ளார். இந்த 13 கோடி இருந்தால் அதை வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டது சிறப்பானதாகும்.

முதல்வருக்கு உள்ள பக்குவம்
அப்படி சொல்வது எல்லாம் முதல்வருக்கு உள்ள பக்குவம். அவர் சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக பாராட்டிக் கொள்வது இல்லை. அதெல்லாமே அவருக்குண்டான பக்குவம். அந்த பக்குவம் இல்லாமல் எப்படி ஒரு முதல்வர் இருக்க முடியும். அது மிகச் சிறந்த பண்பு. அதை பாராட்டுகிறேன். மிகவும் நல்லாயிருக்கிறது. இது இல்லாமல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கமா பதில் சொல்றதும் பார்க்கிறேன் நல்லாயிருக்கு..

புகழ்ந்து
சட்டசபையில் தலைவர்களை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது. நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை எடுத்துக் கூறி முதல்வர் கண்டித்தும் இருக்கிறார். அது பார்க்க நல்லாயிருக்கிறது. மிகவும் நல்லாயிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
-
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம்! நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு.. தவெகவுக்கு சவால்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!










Click it and Unblock the Notifications