தவெக மாநாட்டில் திமுகவை அட்டாக் செய்து பேசிய விஜய்.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்து ரியாக்சன்
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், பாஜகவையும் திமுகவையும் நேரடியாக விமர்சித்து பேசினார். தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்பம், சுயநலக்கூட்டம்தான் நமது அடுத்த எதிரி என்றும் விஜய் பேசினார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதில் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், மாற்றுக் கட்சி என சொல்லிட்டு பத்தோடு பதினொன்று என்று சொல்லிக்கொண்டு Extra luggage ஆக வரல.. என்னோட டார்கெட்டே வேற.. என்று பேசினார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் எதிரி யார் என்றும் கொள்கை, கோட்பாடுகளையும் விஜய் கூறினார்.

ஒரு முடிவோடு தான் நான் வந்திருக்கேன். இனி வந்தப் பாதையை திரும்பி எல்லாம் பார்க்க மாட்டேன். சமூக வலைதளங்களில் கம்பு சுத்த வந்த கூட்டம் கிடையாது நாங்க.. மக்களின் உரிமைக்காக அரசியல் வாள் ஏந்தி நிற்கும் கூட்டம். ஏ டீம், பி டீம் என்று சொல்லி பயமுறித்திவிடலாம் என நினைச்சுடாதீங்க.. 2026 தேர்தல் போருக்கான நாளை குறிக்கும். அந்த நாளில் மக்கள் தவெக சின்னத்துக்காக வாக்களிப்பார்கள்.
திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.. இனி எவ்வளவு மோடி மஸ்தான் வேலை செஞ்சாலும் வேலைக்கு ஆவாது. எங்கள் தவெகவுக்கு நாங்கள் பூசிய நிறத்தை தவிர வேறு நிறத்தை பூச முடியாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் எங்களின் கொள்கை. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்களிப்போம் என்று விஜய் பேசினார்.
இந்த நிலையில், விஜய் பேசியது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து உதயநிதி கூறியதாவது:- விஜய் பேசியதை நான் இன்னும் கேட்கவில்லை.. விஜய் பேசியதை கேட்டுவிட்டு நான் பதில் கூறுகிறேன். விஜயின் முழு பேச்சை கேட்ட பிறகு தான் என்னால் பேச முடியும். இவ்வாறு கூறிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications