முதல்வரும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.. சட்டசபையில் உதயநிதி கூறியதும் விஜய் தந்த ரியாக்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை சபாநாயகராக இன்று தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் பதவியேற்று சபையை தலைமையேற்று நடத்தினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து எம்எல்ஏக்கள் பேசினர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பேசினார். அப்போது, ''முதலமைச்சரும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்'' என்றவுடன் விஜய் கொடுத்த ரியாக்சன் கவனம் பெற்றது. அதோடு சபையில் இருந்தவர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். நேற்று சட்டசபை கூடியது. எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். இன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டனர்.

vijay-smile-in-assembly-when-udhayanidhi-stalin-says-cm-and-i-studied-at-the-same-college

தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் பதவிக்கும், திருச்சி மாவட்டம் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் ஆகியோர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று இவர்கள் 2 பேரும் சட்டசபையில் பொறுப்பேற்றனர். சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபை முன்னவர் செங்கோட்டையன் ஆகியோர் அழைத்து சென்று சட்டசபை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

அதன்பிறகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து பேசினர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து பேசினார். அப்போது அவர் ''முதலமைச்சரும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்'' என்று கூறியதும் விஜய் புன்னகை செய்தார். உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ''முதலமைச்சரும், நானும் ஒரே கல்லூரியில் படிததவர்கள். இருந்தாலும் அரசை நடத்துவதில் திமுக தான் சீனியர்ஸ். 1967லேயே ஆட்சிக்கு வந்த கட்சி திமுக, அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நாங்க ரெடியா இருக்கோம். அதை ஏற்க நீங்களும் தயாரா இருங்க'' என்றார்.

முதலமைச்சரும், நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்று கூறியதும் முதலமைச்சர் விஜய் புன்னகை செய்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+