கோல் போட டிரை பண்ணுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. வைரலாகும் விஜய் பேச்சு!
சென்னை: விஜய் ரசிகர்கள் செம உற்சாகமாக உள்ளனர். சும்மா இருந்த எங்களை சீண்ட சீண்ட அது எங்களை மேலே மேலேதான் கொண்டு போகிறது என்பதே அவர்களின் உற்சாகம்.. இதோ விஜய்யின் மேடைப் பேச்சை வைத்து வைரலாக்கி வருகின்றனர்.
மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். திடீரென ஒரு அதிரடி ரெய்டை வருமான வரித்துறை கையில் எடுத்தது. பைனான்சியர் அன்புச் செழியன் வீடு, அலுவலகங்களில் ஆரம்பித்த அந்த ரெய்டு பின்னர் படிப்படியாக ஏஜிஎஸ் குழுமத்திற்குப் போய் கடைசியில் விஜய்யிடம் வந்து நின்றது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. விஜய் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நிலையில் அவசரம் அவசரமாக அங்கு விரைந்த வருமான வரித்துறையினர் கிட்டத்தட்ட கைது செய்து கொண்டு செல்வது போல சென்னைக்கு விஜய்யை அழைத்து வந்தனர்.

ஐடி ரெய்டு
சென்னையில் உள்ள விஜய்யின் இரு வீடுகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. விஜய்யின் மனைவி, தந்தை உள்ளிட்டோரிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விஜய்யின் அசையா சொத்துக்கள், சம்பளம் குறித்து துருவித் துருவி விசாரணை நடைபெற்றது. ஆனால் 2 நாட்களாக நடந்தும் கூட ஆய்வில் எதுவும் சிக்கவில்லை. விஜய் பக்கம் ஏதும் தவறு இருப்பதாகவும் தெரிய வரவில்லை.

உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
இந்த நிலையில் விசாரணை முடிந்து வருமான வரித்துறையினர் விஜய்யிடம் ஸ்டேட்மென்ட் வாங்கிக் கொண்டு விடை பெற்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் தரப்பு செம உற்சாகமாகியுள்ளது. எங்களது தலைவர் எப்பவும் சுத்தம் மத்தவங்க மாதிரி கிடையாது என்று கிளம்பியுள்ளனர். அதை விட முக்கியமாக தற்போது விஜய்யின் பேச்சு ஒன்று வைரலாகி வருகிறது.

ஸ்ரீமன் டிவீட்
விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் ஒரு விஜய் பேச்சை தனது டிவிட்டரில் போட்டுள்ளார். பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த பேச்சு அது. அதில் நாம கோல் போட டிரை பண்ணுவோம். அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும். சமயத்துல நம்ம சைட் இருப்பவனே சேம் சைடு கோல் போட்ருவான் என்று விஜய் பேசியதை ஸ்ரீமன் போட்டுள்ளார்.
|
பேச்சு வைரல்
இந்த வீடியோவை இப்போது வைரலாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அதை விட முக்கியமாக, மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக காத்திருக்கோம். அதில் விஜய் பேசப் போகும் பேச்சுக்காக ரொம்ப வெறித்தனமாக காத்திருக்கோம் என்றும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஆக மொத்தம் விஜய் ரசிகர்களுக்கு தேவையில்லாமல் கன்டென்ட் கொடுத்து விட்டார்கள் வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் என்றுதான் பேச்சாக உள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications