’ஜான்’ ஏறினால் ’ஆதவ்’ சறுக்குறாரு! வேலைக்காகாத விஜய் வியூகம்! படு மோசமாய் சொதப்பிய தவெக! என்னாச்சு?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் இதுவரை பாதி தொகுதிகளில் கூட பிரச்சாரம் செய்யவில்லை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுக்கும் நேரடி சவாலாக தவெக தனித்து களம் கண்டாலும், அக்கட்சியின் தேர்தல் வியூகம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சில தொகுதிகளில் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்தாலும், சில முக்கிய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யாமல் இருந்தது கட்சி வாக்குகளை பாதாளத்தில் தள்ளியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தல் தேதி வெளியான பின்னர் அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி நிறைவும் செய்தும் விட்டனர்.

அந்த வகையில் தவெகவும் பிரச்சாரத்தையும் சிறப்பாக கையாண்டு வருகிறது. தவெகவின் பலமாக பார்க்கப்படும் அம்சங்களில் முக்கியமானது, கட்சித் தலைவராக உள்ள விஜய் நேரடியாக மக்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து வருவது தான்.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் அடிப்படைத் தொண்டர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர் போன்ற பொதுமக்களை முன்வைத்து அறிக்கை வெளியிடப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் ஒரு நல்ல கவனத்தை ஈர்த்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதே நேரத்தில், சில பலவீனங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
தவெக விஜய்
குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கடலூர் உள்ளிட்ட சுமார் 12 மாவட்டங்களில் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்யாதது, அந்த பகுதிகளில் கட்சி வேட்பாளர்களின் பலத்தை குறைக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் நேரடி பிரச்சாரம் செய்யாததால், அங்குள்ள வாக்காளர்களிடம் ஆதரவு குறைய வாய்ப்பு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
விஜய் கூட்டணி
மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பல கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் தவெக இடையே கூட்டணி அமையாதது, எதிர்க்கட்சியான திமுகவுக்கு சாதகமாக அமையக் கூடும் என்ற அரசியல் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. அதாவது, அதிமுக மற்றும் தவெக இரு கட்சிகளுக்கும் கிடைக்கக்கூடிய வாக்குகள் பிரிந்து போகும் நிலையில், அதன் பலன் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தவெக வாக்கு வங்கி
அதே நேரத்தில், சில தொகுதிகளில் தவெக கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சோழிங்கநல்லூர் மற்றும் திருவள்ளூர் போன்ற பகுதிகளில் தவெக வாக்கு வங்கி வலுவாக இருக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. சில 'ரகசிய சர்வே' கணிப்புகளின் படி, குறிப்பிட்ட சில தொகுதிகளில் 30 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தவெக பிரச்சாரம்
இதற்கிடையில், ஆளும் கட்சி மீது தவெக தரப்பில் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. தவெக வளர்ச்சியை தடுக்க முயற்சிகள் நடப்பதாகவும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாகவும் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். இதுவே ஆளும் கட்சியின் தோல்வி பயத்தை காட்டுகிறது என தவெக நிர்வாகிகள் வாதிடுகின்றனர். 2026 தேர்தலில் தவெக கட்சி ஒரு முக்கிய அரசியல் காரணியாக உருவெடுத்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவில் பிரச்சாரம் செய்யாதது, கூட்டணி அமைக்காதது போன்ற அம்சங்கள் நிச்சயம் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர்.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications