இப்பவே இப்படி.. விஜய் சார் முதலமைச்சர் ஆனால்? நெகிழ்ந்து பேசிய நாங்குநேரி சின்னத்துரை
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம், 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்குச் சென்ற நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் அருகே அமர்ந்தார். இந்நிலையில் விஜய் முதலமைச்சர் ஆனால்..என்ன செய்வார் என்பது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் மாணவன் சின்னத்துரை.
2023-2024ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்தது தமிழகம் முழுவதும், பேசுபொருளானது.

இதை அடுத்து 234 தொகுதிகளிலும் இரு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை அடையாளம் காணும் பணி கடந்த வாரமே நிறைவு பெற்றது. இதையடுத்து முதற்கட்டமாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் 'தமிழக வெற்றிக் கழகம்' சார்பாக இன்று விஜய் பாராட்டி வருகிறார்.
முதற்கட்டமாக வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காலை 9.30 மணியளவில் நடிகர் விஜய் அரங்கத்திற்குள் 'தளபதி.. தளபதி.. எங்கள் தளபதி' பாடல் பின்னணியில் ஒலிக்க அரங்கத்திற்குள் வந்தார். அப்போது அரங்கத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்த விஜய் கையசைத்தார். இதனை தொடர்ந்து மேடையில் ஏறி நின்று அவர் மாணவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த பின் , மேடையில் இருந்து இறங்கி மாணவர்கள் உடனேயே அமர்ந்து கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து உற்சாகமாக கலந்துரையாடிய விஜய் அதற்குப் பிறகு அவர்களுடன் உரையாற்றினார். இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மாணவ, மாணவிகளுக்கு தங்கம், வைர மோதிரம், நிதியுதவி, பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அவர்களோடு உற்சாகமாக வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக மேடையில் இருந்து இறங்கிய விஜர் மாணவர்கள் உடனேயே அமர்ந்து கொண்டார். குறிப்பாக நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரையின் அருகில் சென்று அமர்ந்தார். தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டை பெற்றது. தொடர்ந்து மாணவன் சின்னதுரைக்கு பரிசும், சான்றிதழும் வழங்கிய விஜய் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து விஜய் உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சின்னத்துரை, விஜய் முதலமைச்சர் ஆனால் இன்னும் சிறப்பாக கல்விக்காக செய்வார் என கூறினார். இதுதொடர்பாக பேசிய அவர்,"விஜய் சாரை பார்ப்பதற்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய ஒரு நடிகரை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன்.
எனக்கு தெரிந்து வேறு எந்த நடிகரும், அவர்களின் ரசிகர்களும் இப்படி படிப்புக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்தது இல்லை. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அவங்க நிற்கிறார். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இப்படி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் அப்படின்னா முதலைமச்சர் ஆனால் இதை விட அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார் என நான் நம்புகிறேன்" என கூறினார்.












Click it and Unblock the Notifications