விஜய்: 'சாமி நீ தான் காப்பாதனும்'.. கதறி கதறி அழுத தவெக தொண்டன்.. உடனே வந்த குட்நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு தவெக-வின் வெற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லம் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இன்னும் உறுதியாகாத நிலையில், விஜய்யால் முதல்வர் பதவி ஏற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இது தவெக கட்சியினர் மத்தியிலும், நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay CM politics vijay governor invitation to form government tvk supporter crying prayer video saami nee thaan kaappathanum viral vijay becomes tamil nadu cm tvk emotional supporter video tamil nadu governor calls vijay vijay tvk good news today tamil nadu assembly election latest vijay neelangarai house celebration tvk majority breakthrough vijay second governor meeting tvk coalition update tamil nadu politics breaking news vijay cm dream comes true tvk viral emotional moment

இந்த நிலையில் "எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என் தலைவர் முதலமைச்சர் ஆகனும்.. சாமி நீ தான் காப்பாதனும்" என்று கதறி அழுத த.வெ.க தொண்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வெளியான நேரத்தில், விஜய் உடனான 2வது சந்திப்பில் கவர்னர் முதல்வர் பதவியை ஏற்க அழைத்துள்ளார். சி.ஜோசப் விஜய் என்னும் நான்.. தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்!. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.

வெற்றிபெற்றும் ஆட்சியமைப்பதில் சிக்கல்

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.

ஆனால், சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக இருப்பதால், தற்போது தவெக கூட்டணிக்கு மேலும் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த பிறகும், தவெக அணியின் பலம் 112 ஆக மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மீதமுள்ள உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சூழலில், பிற கட்சிகள் இன்னும் வெளிப்படையான ஆதரவை அறிவிக்காததால் அரசியல் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது. இதனால், "விஜய் உடனடியாக முதலமைச்சராக பதவியேற்பாரா?" என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.

மீண்டும் கவர்னரை சந்தித்த விஜய்..

இந்த அரசியல் பரபரப்பின் நடுவில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சந்தித்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்காக ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் வழங்கினார்.

ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உறுதியாக இல்லாத காரணத்தால், உடனடியாக ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின்னர், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து தவெக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று மீண்டும் கவர்னரை விஜய் சந்தித்துள்ளார், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் விஜய் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஏற்ற கவர்னர் முதல்வர் பதவியை ஏற்க அழைத்துள்ளார் என தகவல் வெளியானாலும், கவர்னர் தலைமையில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.. சி.ஜோசப் விஜய் என்னும் நான்.. தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்!

வெறிச்சோடிய நீலாங்கரை வீடு.. மீண்டும் பரபரப்பு

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே விஜய்க்கும் அவரது இல்லத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. முதலமைச்சருக்கு வழங்கப்படும் கான்வாய் பாதுகாப்பு வாகனங்களும் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் நேற்று இரவு அந்த பாதுகாப்பு கான்வாய்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட விஜய்யின் நீலாங்கரை வீட்டு பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தொண்டர்கள் கூட குறைவாக காணப்படும் இந்த நிலை, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் கான்வாய் பாதுகாப்பும், தொண்டர்கள் சூழ விஜய் நீலாங்கரை வீட்டின் முன் மீண்டும் பரபரப்பானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+