தேர்தலில் திமுக, அதிமுகவை.. தூக்கி சாப்பிடும் தவெக விஜய்.. சர்வே செய்தது யார்? திமுக, அதிமுக விசாரணை
சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வேயின் ரிசல்ட்டுகள் விஜய்யின் த.வெ.க.வுக்கு மிகப் பெரிய ஆதரவை தருவதாக இருக்கின்றன.
வெற்றிப் பெறும் இடங்கள், சதவீதம், மண்டல வாரியாக ஆதரவு, பெரும்பான்மை சாதிகளின் ஆதரவு என அனைத்திலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகியவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற வகையில் அந்த சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சர்வே முடிவுகள்
இந்த சர்வே முடிவுகள் கடந்த 4 நாட்களாக சோசியல் மீடியாக்களிலும், பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் த.வெ.க. தரப்பினர் பரப்பி வருகின்றனர். இது திமுக, அதிமுக இரு தரப்பையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம். இதனை அடுத்து இரு கட்சிகளின் ஐ.டி. விங்குகளும் இந்த சர்வேயின் பின்னணி குறித்து துப்பறிந்து வருகிறது.
முதல் கட்டமாக, மும்பையில் அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறதா? ஆன் லைன் சர்வேவா? மக்களிடம் பேலட் பேப்பர் கொடுத்து எடுக்கப்பட்டதா? ஆன் லைன் சர்வே எனில் அதன் உண்மைத் தன்மை என்ன? என்பது குறித்தெல்லாம் ஆராயப்படுகிறதாம். சர்வேயில் சொல்லப்பட்ட பல முடிவுகள், சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்களிடத்தில் இருக்கிறது.
விசாரணை
வன்னியர் சமூகத்தில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லாத போலவும் திமுக அதிமுகவை கடந்த த.வெ.க.வுக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருப்பது போலவும் காட்டப்படுகிறது. வன்னியர் சமூகத்தில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லை என சொல்வதை திமுக, அதிமுக தலைமையே நம்பாது என்கிற நிலையில், வன்னியர்களிடம் விஜய்க்கு அமோக ஆதரவு இருப்பதாகச்சொல்வதுதான் சர்வேயின் மொத்த முடிவுகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கின் றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதற்கிடையே, இந்த சர்வே போலியானது என்றும், கனிசமான தொகை த.வெ.க.. தரப்பிலிருந்து செலவிடப்பட்டு சோசியால் மீடியாக்களில் வரவழைத்துள்ளனர் என்றும் திமுக தரப்பில் கண்டறியப்பட்டுள்ளதாம்.
கூட்டணி
ஏற்கனவே ஒரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சி கள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்'.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாது.
அதிமுக - பாஜக - தவெக கூட்டணி அமையும் பட்சத்தில் யாருக்கு எத்தனை சீட் கூட்டணியில் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications