விஜய் மீது திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார்! ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய விஜய், தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக புகார் அளித்துள்ளார். மேலும் விஜய் ரேம் வாக் சென்றபோது அவரது பவுன்சர்கள் தொண்டர்களை ஈவு இரக்கமின்றி தூக்கி எறிந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்றும், ஜனநாயகன் திரைப்படம் தான் எனது இறுதி திரைப்படம் என்றும் விஜய் அறிவித்தார். 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று கூறிய விஜய் அதற்காக ஆயத்தம் ஆகி வருகிறார்.

அந்த வகையில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் தவெக மாநாட்டில் விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்தார். மேலும் தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் பேசினார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து பேசினார். பாஜக பாசிசம் என்றால் திமுக என்ன பாயாசமா செய்கிறது என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து திமுகவை மன்னராட்சி என்று விமர்சித்து வந்தது. இந்த நிலையில் மதுரையில் தவெகவின் இரண்டாம் மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று குறிப்பிட்டு பேசினார். வார்த்தைக்கு வார்த்தை ஸ்டாலின் அங்கிள் என்று பேசிய விஜய், 2026 தேர்தலில் தவெக திமுக இடையே தான் போட்டி என்றும், இதுவரை இல்லாத அரசியல் மாற்றத்தை 2026 தேர்தல் நிகழ்த்தும் என்றும் பேசியிருந்தார்.
ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளனாது. திமுக தலைவர்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் விஜய் பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக விஜய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார்.
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய விஜய், தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக சிவசாகர் புகார் அளித்துள்ளார். மேலும் விஜய் ரேம் வாக் சென்றபோது அவரது பவுன்சர்கள் தொண்டர்களை ஈவு இரக்கமின்றி தூக்கி எறிந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
-
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்!












Click it and Unblock the Notifications