Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினை நேரடியாக எதிர்க்க விஜய் முடிவு? ஜெகனுக்கு பவன் கல்யாண் செய்த அதே "சம்பவம்".. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் இதேபோன்ற அரசியலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

pawan kalyan tamizhaga vetri kazhagam lok sabha election 2024 2024 vijay

கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜய் அறிக்கை; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார்.

பவன் கல்யாண் ஸ்டைல்: முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் இதேபோன்ற அரசியலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம்.. ஆந்திர பிரதேசத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு கைதானார். ஜெகன் மோகன் அரசு .. அரசியல் பாதாளத்தில் இருந்த நாயுடுவை கைது செய்து மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்தார்.

திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார். அன்று இரவே பவன் கல்யாண் ஜன சேனா கட்சி நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு என்டிஆர் மாவட்டத்திற்கு சென்றார்.

சந்திர பாபு நாயுடுவை சந்திக்க 40க்கும் மேற்பட்ட கார்களில் பவன் கல்யாண் அதிரடியாக சென்றார். இரவோடு இரவாக பவன் கல்யாண் இப்படி சென்றது பெரிய புயலை ஏற்படுத்தியது. போலீஸ் பவனை தடுத்து நிறுத்தியதும்.. பவன் அப்படியே இறங்கி என்டிஆர் மாவட்டத்தில் நடக்க தொடங்கினார்.

விஜயவாடாவில் உள்ள மங்கள கிரி நோக்கி பவன் கல்யாண் வேகமாக நடக்க தொடங்கினார். ஒரு சூப்பர் ஸ்டார் ஹீரோ.. அரசியல் தலைவர்.. பவன் கல்யாண் இப்படி வேகவேகமாக நடந்து சென்றது அங்கே பெரிய அரசியல் ஸ்டேட்மென்ட் ஆக மாறியது.

அரசியல் ஸ்டேட்மென்ட்: அந்த இரவுதான் ஜெகன் மோகனின் அரசியல் வீழ்ச்சியாக மாறியது. பவன் கல்யாணின் அரசியல் எழுச்சியாகவும் மாறியது. எப்படி ஒரு எதிர்க்கட்சி தலைவரின் கைதுக்கு பவன் களமிறங்கி.. தைரியமாக முதல்வரை எதிர்த்தது பவனின் அரசியல் எழுச்சியாக பார்க்கப்பட்டது.

அதுதான் இன்று பவன் கல்யானை ஆந்திராவின் துணை முதல்வராக, அமைச்சராக உயர்த்தி உள்ளது.

விஜய் அதே ஸ்டைல்: தமிழ்நாட்டிலும் பவன் கல்யாணின் அரசியல் ஸ்டைலை பின்பற்ற தொடங்கி உள்ளாரோ நடிகர் விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாழ்த்துக்களை மட்டும் தினம் தினம் சொல்லிக்கொண்டு இருக்கும் நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் ரீதியாக பவன் கல்யாணிடம் இருந்து முக்கியமான சில விஷயங்களை கற்று அதை தமிழ்நாட்டில் பின்பற்ற தொடங்கி உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பவன் அங்கே முன்னாள் முதல்வரை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்த நிலையில்.. இங்கே விஜயும் ஸ்டாலினுக்கு எதிராக அரசியலை எடுத்துள்ளாரோ என்று என்ன தோன்றுகிறது. ஏனென்றால் நாடே நீட் காரணமாக கொதித்து போய் உள்ள நிலையில் விஜய் அதை பற்றி பேசவில்லை. ரயில் விபத்து குறைபாடுகள் பற்றி பேசவில்லை. காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் பற்றி பேசவில்லை.

ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜய் கடுமையான நிலைப்பாடு எடுத்துள்ளார். இதனால் விஜய் ஸ்டாலினுக்கு எதிராக அரசியலை எடுத்துள்ளாரோ என்று என்ன தோன்றுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+