மரதகம் குமரவேல், திலகபாமாவுக்கு சீட் கொடுக்கணுமா.. கேள்வி கேட்ட விஜய்.. பதறிய செங்கோட்டையன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக சார்பாக மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமாவுக்கு சீட் கொடுக்க வேண்டுமா என்று முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதனால் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் பதற்றம் அடைந்ததாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகினர். இதனால் இடைத்தேர்தல் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது.

Vijay

ஏற்கனவே திமுக முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. திமுக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் களமிறக்கப்பட்டுள்ளார். இளம் வேட்பாளர்களை அறிவித்துள்ளதன் மூலமாக திமுக புதிய பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளுடன் எந்த ஆலோசனையையும் திமுக மேற்கொள்ளவில்லை.

இன்னொரு பக்கம் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெக தரப்பில் மீண்டும் மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோருக்கு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் ஒரு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு அதிகரித்துள்ள சூழலில், மீண்டும் மரகதம் குமரவேல் மற்றும் திலகபாமா ஆகியோர் சீட் கொடுத்தால், அது இடைத்தேர்தலில் பின்னடைவை உருவாக்கும் என்று விஜய் கருதி இருக்கிறார். திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் இதே விமர்சனத்தை முன் வைக்குமே என்றும் ஆலோசித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் செலவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் திலகபாமா பெரிதாக இன்னும் களமிறங்கவில்லை. அதனால் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுகவில் இருந்து வந்த மரகதம் குமரவேலை இறக்கிவிட்டு, இன்னொரு தொகுதி நமது கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கலாமே என்று கேட்டிருக்கிறார். இதனால் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் பதற்றம ஆகி இருக்கின்றனர்.

ஏனென்றால் ராஜினாமா செய்துவிட்டு வந்தால், மீண்டும் சீட், கட்சியில் பொறுப்பு மற்றும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்து அழைத்து வந்துள்ளனர். தற்போது சீட் கொடுக்காவீட்டால், வரும் காலத்தில் வேறு யாரும் அதிமுகவில் இருந்து வர மாட்டார்கள் என்று கூறி இருக்கின்றனர். இதனை உணர்ந்து கொண்ட முதல்வர் விஜய், வேட்பாளர்களாக அவர்கள் இருவரையும் தேர்வு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+