எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்? 1977க்கு பிறகு தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் மாற்றம்
சென்னை: 1977க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருப்பது உறுதியாகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலையில் ஆட்சி அமையும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத முதல் ஆட்சி 60 ஆண்டுகளுக்கு ஏற்படுவது உறுதியாகி உள்ளது. எம்ஜிஆர் மட்டுமே ஒரே தேர்தலில் ஆட்சியை பிடித்தார். அதேபோன்று 49 வருடங்களுக்கு பிறகு 2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. ஏனெனில் திமுகவின் டாப் தலைவர்கள் உள்பட பலரும் பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.
காலை 9.30 மணி நிலவரப்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 68 இடங்களிலும், திமுக கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றை கவனித்தால் 1977ம் ஆண்டு மட்டுமே ஒரு நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். அதன்பிறகு சுமார் 50 ஆண்டுகளாக மாறாமல் இருந்தது இப்போது மாறி உள்ளது .

இன்று காலை நிலவரப்படி, திமுக-வின் டாப் தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் தங்களது சொந்தத் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களிடம் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். இது வெறும் 'வாக்குச் சரிவு' அல்ல; இது ஒரு 'அரசியல் சுனாமி' என அரசியல் நோக்கர்கள் வர்ணிக்கிறார்கள். தற்போதைய முன்னிலை நிலவரம் நீடித்தால், 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஒரு மாற்று அரசியலின் தொடக்கமாக இது அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
60 ஆண்டுகால கோட்டை சரிந்தது எப்படி?'
1967-ல் இருந்து திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளே தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டு வந்தன. இந்த 60 ஆண்டுகாலச் சங்கிலியை உடைப்பது சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், விஜய் அதை சாத்தியமாக்கியுள்ளார். முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக விஜய்யின் 'மாற்றத்தை' ஏற்றுக்கொண்டது.. எப்போதும் இல்லாத அளவிற்கு பதிவான வாக்கு சதவீதமே உணர்த்தியது
எம்.ஜி.ஆரைப் போலவே அடித்தட்டு மக்களின் ஆதரவையும், குறிப்பாகப் பெண்களின் வாக்குகளையும் விஜய் கவரத் தொடங்கியது இன்று வாக்குகளாக மாறியிருக்கிறது. எம்.ஜி.ஆர் அன்று எப்படித் தனது முதல் தேர்தலிலேயே முதல்வராகி சரித்திரம் படைத்தாரோ, அதேபோல 2026-ல் விஜய் முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. "எம்.ஜி.ஆருக்குப் பின் யார்?" என்ற கேள்விக்கு இன்று தமிழக மக்கள் தங்களது வாக்குகள் மூலம் "விஜய்" என்று பதில் சொல்லியிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் போது, 1977-க்குப் பிறகு தமிழகம் கண்ட மிகப்பெரிய அரசியல் மாற்றமாக இது வரலாற்றில் பொறிக்கப்படும் என்பது உறுதி.அதேநேரம் தவெகவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா அல்லது அதிமுக உடன் சேர்ந்து ஆட்சியா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்














Click it and Unblock the Notifications