விஜய் டூ அண்ணாமலை.. 2026 தமிழகத் தேர்தல்களிலிருந்து பெருநிறுவனங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தல் விசித்திரமான தேர்தல் தான். பண பலம், சாதிய பலம், பல ஆண்டு கட்டமைப்பு, சின்னம், வேட்பாளர், மக்களிடம் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, வியூகத்தின் படி செயல்படுவது என பாரம்பரிய விஷயங்கள் எல்லாம் தோற்றுப்போயிருக்கிறது.. எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்றோ, நம் சாதி, நம் மதம், நம் கட்சி நம்மை ஆதரிப்பார் என்றோ நம்பிய அரசியல் கட்சிகளின் நம்பிக்கை முதல் முறையாக பொய்த்து போயிருக்கிறது. 2026 தமிழகத் தேர்தல்களிலிருந்து பெருநிறுவனங்கள் கற்றுக்கொள்ளும் 10 பாடங்களை பார்ப்போம்.

1. ஆட்குறைப்பு என்பது எல்லா மட்டங்களிலும் வேதனையானது: ஸ்டாலின்

இந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் சுமார் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனால் வாய்ப்பு கிடைக்காமல் போன பல திமுக தலைவர்கள் இந்த முறை ஆட்குறைப்பு நடந்துவிட்டதாக கருதி ஒதுங்கினார்கள். அதன் விளைவால் திமுக தோல்வியை சந்தித்துள்ளது.திமுகவின் வரலாற்றில் முதல்வரே தோற்றுப்போவது இதுதான் முதல்முறை

Vijay to Annamalai Lessons Corporations Can Learn from the 2026 Tamil Nadu Elections

2. வீட்டிலிருந்து வேலை செய்வதும் நல்ல பலன்களைத் தரும்: விஜய்

இந்த தேர்தலில் எல்லாருமே ஓடி ஆடி தெருவில் இறங்கி வேலை செய்தார்கள். 234 தொகுதிக்கும் எடப்பாடி பழனிசாமி போனார். ஸ்டாலினுமே எல்லா மாவட்டத்திற்கும் போனார். உதயநிதி போகாத தொகுதியே இல்லை. அவ்வளவு தூரம் கடுமையாக வேலை செய்தார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே கிடைக்காத வெற்றி.. வீட்டிலிருந்து வேலை செய்த விஜய்க்கு கிடைத்துள்ளது. விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகி உள்ளார்.

3. கடினமாக உழைப்பது மட்டுமே பதவி உயர்வைப் பெற்றுத் தராது: சீமான்

என்ன தான் ஓடிஓடி உழைத்தாலும் பலன் சில நேரம் இருக்காது என்பதற்கு சீமான் சிறந்த உதாரணம்.. நாம் ஒரு மாற்றத்தை நோக்கி உழைப்போம். ஆனால் விதி வேறு ஒரு ஒன்றை முடித்து வைக்கும். சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தோற்றுபோயிருக்கிறது.

4. சக பணியாளர்கள் நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை: காங்கிரஸ்

சக பணியாளர்கள் நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை காங்கிரஸ் உணர்த்தி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக உடன் வேலை செய்தது. ஜெயித்த மறுநாளே தவெகவிற்கு போய் ஆதரவளித்துள்ளது.

5. தற்போதைய மதிப்பீட்டில் கடந்தகால சாதனைகளுக்கு மதிப்பில்லை: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி அதிமுக என்ற கட்சியை கடும் சவாலுக்கு மத்தியில் வழி நடத்தி வந்தார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார்.. மக்கள் எப்படியும் நமக்கு வாய்ப்பு தருவார்கள், நாம் கடந்த காலத்தில் நிறைய நல்ல விஷயங்களுக்கு செய்திருக்கிறோம் என்று நம்பினார். ஆனால் தற்போதைய மதிப்பீட்டில் கடந்த கால சாதனைகளுக்கு மதிப்பில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருப்பார்

6. வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் வேலை/நிறுவனங்களை மாற்றுவது முக்கியம்: செங்கோட்டையன்

பல நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் செங்கோட்டையன் போல் தான் சரியான நேரத்தில் வேலையைவிட்டு துணிச்சலுடன் மாற வேண்டும். ஒருவேளை மாறாமல் போனால் நாம் காணாமல் போவோம் என்பதை உணர வைத்துள்ளார்.

7. நீங்கள் உருவாக்கிய ஏஜென்ட்கள்/பாட்கள் உங்களுக்குப் பதிலாக வரலாம்: வி.எஸ்.பாபு

சில நேரங்களில் நமக்காக வேலை செய்தவர்களே நமக்கு எதிராக திரும்பலாம் என்பது ஸ்டாலினுக்கு நிச்சயம் பொருந்தும். ஸ்டாலினுக்காக கொளத்தூரில் வேலை செய்த விஎஸ் பாபு தான் இன்று அவரை தோற்கடித்துள்ளார்

8. ஒரு முக்கியமான நேரத்தில் ஒரு முக்கிய வளத்தை இழப்பது நிறுவனத்திற்கு ஒரு பெரிய இழப்பாக இருக்கும்: அண்ணாமலை பாஜக

ஒரு முக்கியமான நேரத்தில் ஒரு முக்கிய வளத்தை இழப்பது நிறுவனத்திற்கு ஒரு பெரிய இழப்பாக இருக்கும் என்பதற்கு பாஜகவிற்கு நிச்சயம் பொருந்தும். அதிமுக கூட்டணியில் சேர அண்ணாமலையை தலைமை பொறுப்பில் இருந்து மாற்றியதால், பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக நல்ல வாக்கு வங்கி பெற்றிருந்தது.

9. ஒரு வேலையில் பணம் மட்டுமே முக்கியமான விஷயம் அல்ல: தமிழக மக்கள்

ஒரு வேலையில் பணம் மட்டுமே முக்கியமான விஷயம் அல்ல என்பதற்கு தமிழக மக்கள் நிச்சயம் சிறந்த உதாரணம் தான். பொதுவாக காக வாங்கிவிட்டு ஓட்டுப்போடுவார்கள். எனக்கு தொகுதியில் உள்ள தனிப்பட்ட செல்வாக்கை வைத்து ஜெயிப்பேன். பணம் கொடுத்தால் ஓட்டு தானாக விழும் என்ற மாயையை இந்த தேர்தலில் மக்கள் உடைத்துள்ளனர்

10. முன்கூட்டியே ஓய்வு பெறுவதும் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்: கமல்ஹாசன்

ஒரு வேலையில் முன்கூட்டியே ஓய்வு பெறுவதும் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம் என்பதற்கு கமல்ஹாசன் சிறந்த உதாரணம். அவர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார். அப்படி ஒதுங்கி ஓய்வு பெற்ற காரணத்தால், பெரும் தோல்வியில் இருந்து தப்பி உள்ளதாக விமர்சிக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+