FIR வேண்டாம்! கடைசி நேரத்தில் ராகுல் காந்தியிடம் உதவி கேட்ட விஜய்! 2 நாட்கள் பனையூரில் நடந்தது என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 3 நாட்களாக வீட்டில் இருக்கிறார், பனையூரில் வீட்டில் இருக்கும் அவர் நேற்று மற்றும் நேற்று முதல்நாள் வீட்டில் என்ன செய்து கொண்டு இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
1. கடந்த இரண்டு நாட்களாக அவர் அரசியல் ரீதியாக நிறைய பேரிடம் பேசி உள்ளார். கூட இருக்கும் யாருக்கும் இந்த விவகாரத்தை கையாள தெரியவில்லை என்ற கோபம் விஜயிடம் உள்ளது.

2. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். அதை தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் அருண், ராஜ்மோகன், ஜான் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
3. ஆதவ் அர்ஜுனா பிரச்னையை குறைக்காமல் கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சனையை அதிகரிக்கும் வகையில் போஸ்டுகளை செய்கிறார்.
4. இப்படி அவர்கள் என்ன செய்வது என்று ஐடியா இல்லாமல் இருப்பதால் விஜய் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தவெக தாண்டி வெளியே பலரிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறாராம். வெளியே உள்ள அரசியல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கேட்டு இருக்கிறாராம்.
5. விஜய் பாஜக வழியாக சிலரிடம் பேச முயன்றார். ஆனால் அது தமிழக அரசிடம் எடுபடவில்லை. அதாவது விஜயின் தூதுகளை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
6. முக்கியமாக ராகுல் காந்தி வழியாக விஜய் முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளாராம். அவர் ராகுல் காந்தியிடம் சிலர் வழியாக பேசி உள்ளார். அதில்.. எனக்கு உங்கள் உதவி வேண்டும்.. என்னுடைய பெயர் FIRல் வரக்கூடாது. நிலைமை கைமீறி சென்றுவிட்டது. ஸ்டாலினிடம் பேசுங்கள்.. இதை சரி செய்ய வேண்டும்.. அதற்கான உதவிகளை செய்யுங்கள், என்று ராகுல் காந்தி வழியாக விஜய் கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஆனால் திமுக தரப்பு சட்டப்படிதான் செல்வோம்.. கட்சி பொதுச்செயலாளர் என்ற பெயரில் புஸ்ஸி ஆனந்த் மீது FIR போட்டுள்ளோம்.. சட்டப்படி கோர்ட் சொல்வதையே செய்வோம் என்று உறுதியாக உள்ளதாம்.
7. இதில் விஜய் கைதாகும் வாய்ப்புகளும் உள்ளன. விஜய்க்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவு, பெரிய அளவில் வழக்கறிஞர்கள் படை சப்போர்ட் இல்லை என்றால், கண்டிப்பாக மிக்பெரிய சட்ட சிக்கல் விஜய்க்கு ஏற்படும். இதனால் விஜய் டெல்லி ஆதரவை நாடி உள்ளாராம். இந்த விவகாரத்தை திமுகவிற்கு எதிராக திருப்பலாமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறதாம் டெல்லி. ஏதாவது ஒரு இடத்தில் இதை வைத்து திமுகவிற்கு செக் வைத்தால் அது செந்தில் பாலாஜிக்கு சரிவாக அமையும் என்பதால்.. அதற்கான திட்டத்தில் டெல்லியும் இருக்கிறதாம். இதனால் விஜய் டெல்லியுடன் கைகோர்க்கலாம் என்கிறார்கள்.
8. ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதனால் பல சட்ட ஆலோசகர்களுடன் விஜய் பேசி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications