விஜய்தான் முதலமைச்சர்! CPI, CPM உடன் கை கோர்த்த திருமாவளவன்! தவெகவுக்கு விசிக ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் முதலமைச்சராக 118 எம்எல்ஏக்களின் தேவை என்ற நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. அதேபோல சிபிஎம் கட்சியும் ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தவெகவின் பலம் 116 ஆக அதிகரித்தது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை தெரவித்துள்ளது.

இன்று மதியம் சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ (CPI) அலுவலகத்திற்கு தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சென்ற நிலையில், அவரிடம் 2 எம்எல்ஏக்கள் அடங்கிய ஆதரவு கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பதாக சிபிஐ அதில் தெரிவித்திருக்கிறது.

Vijay

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிக்கு கடந்த தேர்தலில் 2 எம்எல்ஏக்களை வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கெனவே தவெகவுக்கு 108+காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 113 எம்எல்ஏக்களை வைத்திருக்கிறது. இதில் விஜய் இரண்டு இடங்களில் ஜெயித்திருப்பதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே எண்ணிக்கை 112 என இருந்தது. சிபிஐ ஆதரவு தெரிவித்திருப்பதால் மொத்த பலம் 114 என அதிகரித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவை தெரிவித்திருக்கிறது. இன்று காலை நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், விஜய்க்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு மாலையில் நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விஜய்க்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இதனை தொடர்ந்து விசிகவும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. அதேபோல ஐயூஎம்எல் கட்சி தனது 2 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்திருக்கிறது. 4 கட்சிகளின் ஆதரவால் விஜய்க்கு 120 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்கிறார்கள். இனி விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க எந்த தடையும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+