மிகப்பெரிய ட்விஸ்ட்.. ஒரே கல்லில் பல மாங்காய்.. முதல்வராகிறார் திருமாவளவன்? விஜய் அதிரடி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களாக நீடித்து வந்த அரசியல் முட்டுக்கட்டைக்கு, இன்று மாலை ஒரு அதிரடியான முடிவு எட்டப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதுவரை மௌனம் காத்து வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் எதிரிகளின் வியூகத்தைத் தகர்க்கும் வகையில் ஒரு மிகப்பெரிய தியாகத்திற்குத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநரின் நெருக்கடியும் தவெக-வின் சவாலும்
கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், 107 இடங்களைப் பிடித்த விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக நின்றது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் 112 இடங்களை அவர் கையில் வைத்திருந்தாலும், 'மேஜிக் நம்பர்' 118-ஐத் தொட முடியவில்லை. சபாநாயகர் பதவியைக் கழித்தால் 111 இடங்கள் மட்டுமே தவெக வசம் உள்ள நிலையில், மீதமுள்ள 7 இடங்களுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், விஜய்யின் கோரிக்கையை இரண்டாவது முறையாக நிராகரித்தார்.

இந்த இழுபறியைப் பயன்படுத்தி, 59 இடங்களை வைத்துள்ள திமுக, 47 இடங்களை வைத்துள்ள அதிமுக-விற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க ரகசியத் திட்டம் தீட்டுவதாகத் தகவல்கள் பரவின.
விஜய்யின் அதிரடி முடிவு: முதல்வராகும் திருமாவளவன்?
இந்தச் சூழலில், திமுக-அதிமுக கூட்டணியைத் தடுக்கவும், ஆளுநரின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் விஜய் இன்று மாலை ஒரு மெகா கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து நமது செய்தி நிறுவனத்திற்குத் பிரத்யேகப் பேட்டி அளித்த அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா, தமிழக அரசியலையே அதிரவைக்கும் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: "விஜய் இன்று மாலை விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுடன் தனது கூட்டணியை இறுதி செய்கிறார். இந்த ஆட்சி மாற்றத்தில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், விஜய் முதல்வர் பதவியை ஏற்கப்போவதில்லை. மாறாக, விசிக தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக முன்மொழிய விஜய் சம்மதித்துவிட்டார். மேலும், அனுபவம் வாய்ந்த தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் துணை முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. திருமா தற்போது எம்எல்ஏ இல்லை என்றாலும் முதல்வராக பதவி ஏற்றுவிட்டு விஜய் ராஜினாமா செய்யும் ஒரு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆக முடியும். 6 மாதத்திற்குள் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதே விதி.
புதிய கணக்கு: 118-ஐ எட்டுமா இந்த அணி?
திருச்சி சூர்யா பகிர்ந்துள்ள இந்தத் தகவல் உண்மையானால், சட்டமன்றத்தில் பலப்பரீட்சை தலைகீழாக மாறும்.
தவெக (107) + காங்கிரஸ் (5) = 112
விசிக (2) + இடதுசாரிகள் (4) = 6
மொத்த பலம் = 118
இந்தக் கணக்கின்படி, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை இந்த மெகா கூட்டணி துல்லியமாக எட்டுகிறது. சபாநாயகர் இல்லாமலேயே இந்த எண்ணிக்கையை அவர்களால் நிரூபிக்க முடியும் என்பதால், ஆளுநரால் இனி இந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.
தியாகமா அல்லது வியூகமா?
தனது முதல் தேர்தலிலேயே 107 இடங்களைப் பிடித்தும், முதல்வர் பதவியை ஒரு தலித் தலைவருக்கு (திருமாவளவன்) விட்டுக் கொடுப்பதன் மூலம், சமூக நீதியில் தான் உறுதியாக இருப்பதை விஜய் நிரூபிக்க முயல்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதே சமயம், செங்கோட்டையன் போன்ற நிர்வாகத் திறன் கொண்ட ஒருவரைத் துணை முதல்வராக்குவதன் மூலம், ஆட்சி நிர்வாகம் தடையின்றி நடப்பதையும் அவர் உறுதி செய்யத் திட்டமிட்டுள்ளார். இதனால் விசிக இடதுசாரிகள் தவெகவை விட்டு போகாமல் இருப்பார்கள். விஜய் டென்ஷன் இல்லாமல் இருப்பார்.
திமுக - அதிமுக அதிர்ச்சி
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் எனத் திட்டமிட்டிருந்த வேளையில், விஜய்யின் இந்தத் திடீர் 'மூவ்' இரு திராவிடக் கட்சிகளையும் திகைக்க வைத்துள்ளது. குறிப்பாக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய்யுடன் கரம் கோர்ப்பது உறுதியானால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையும்.
இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழகத்தின் அடுத்த முதல்வராகத் தொல். திருமாவளவன் பதவியேற்பது உறுதியாகும். இந்த அதிரடி மாற்றத்தால் தவெக தொண்டர்கள் ஒருபுறம் அதிர்ச்சியடைந்தாலும், திமுக-அதிமுக கூட்டணியை வீழ்த்திய திருப்தியில் உற்சாகமடைவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications