அம்பேத்கர் பெயரை ம்யூட் செய்த விஜய் டிவி! பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆனால் இந்த சீசனில் நிகழ்ச்சி ரசிக்கும்படியாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் பெயரை விஜய் டிவி ம்யூட் செய்திருப்பதால் இந்த விமர்சனங்கள் மேலும் வலுவடைந்திருக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது. தொடக்கத்தில் இதனை கமல்ஹாசன் ஒருங்கிணைத்து வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி ஒருங்கிணைத்து வருகிறார்.

ஆரம்பத்தில் என்னவோ நல்லாதான் இருந்தது. ஆனால், இப்போ நிகழ்ச்சியின் தரம் மோசமானதாக மாறியிருக்கிறது என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியை தொடக்கத்தில் பார்த்ததாகவும், தற்போது குழந்தைகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடிவதில்லை என்றும் கூறி வருகின்றனர். அத்துமீறுதல், இரட்டை அர்த்தத்தில் பேசுதல், வன்மம் போன்றவை இந்நிகழ்ச்சியில் அதிகரித்து வருகிறது என்று பலர் விமர்சித்திருக்கிறார்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு நடுவில்தான் தற்போது சீசன் 9 நடந்து வருகிறது. இதிலும் ஏகப்பட்ட சலசலப்புகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆட்தேர்வில் பிக் பாஸ் சொதப்பியுள்ளது, முக்கியத்துவம் இல்லாத ஆட்களை தேர்ந்தெடுத்திருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பிரச்சனை எழுந்திருக்கிறது. அதாவது ஸ்கூல் டாஸ்க் நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் ஒருவரான கானா வினோத் டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை மேற்கோளிட்டு பேசினார். "நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன்படவில்லை என்றால், நீ கற்றதில் பயன் இல்லை என பாபாசாகேப் அம்பேத்கர் கூறியிருக்கிறார்" என்று பேசினார். ஆனால் இது ஒளிபரப்பப்பட்டபோது, அம்பேத்கரின் பெயர் மட்டும் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.
இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்பேத்கர் சட்டமேதை. அவர் வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி நாயகன். அரசியல் கட்சிகளோடு மட்டும் அம்பேத்கரை பொருத்தி பார்ப்பது என்பது சரியில்லை. 'அம்பேத்கர்' என்பது அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய் டிவியின் நடவடிக்கைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications