விஜய் டிவி நீயா நானா கோபிநாத்தையே எமோஷனலாக்கிய அண்ணன் தங்கை.. இப்படியும் இருப்பாங்களா?
சென்னை: ஆணாதிக்கம் பற்றி பேசும் நபர்கள் இல்லா வீடுகளில் ஆண்கள் தன் அக்கா தங்கைகளுக்காக திருமணத்தை தள்ளி போடுவதை பற்றி பேசுவதே இல்லை. இது கவனிக்கப்படாத ஏரியாவாகவே உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆண் பிள்ளை என்பவர் அதுவும் மூத்த ஆண் பிள்ளை என்பவர் தன் குடும்பத்திற்காக அத்தனை சந்தோஷங்களையும் தியாகம் செய்யும் நபராக இருக்கிறார். தன் தங்கையின் திருமணம், தன் அக்காவின் திருமணத்திற்காக பெற்றோர்கள் வாங்கும் கடனை ஏற்கிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு பின் சீர் செய்து செய்து அவர்களுக்காகவே வாழ்கிறார்கள். ஆனால் பெண்களில் சிலர் தனது அண்ணன் மற்றும் தம்பியை பயன்படுத்தும் வரை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவது சமூகத்தில் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அண்ணனுக்கு என்று குடும்பம் இல்லாத நிலை ஏற்படுகிறது.

அப்படியே திருமணம் நடந்தாலும் அவர்கள் மிகப்பெரிய கடனுடன் தன் வாழ்நாளை கழிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை வெளிப்படுத்தும் விதமாக, திருமணத்தை தாமதப்படுத்தும் அண்ணன்கள் மற்றும் சீக்கிரம் திருமணம் செய்ய வற்புறத்தும் தம்பி தங்கை குறித்து விஜய் டிவியில் நடந்த நீயா நானா விவாத நிகழ்ச்சி பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கிறது.
இதுபற்றி வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில்,ஒரு பெண் தனது அண்ணனின் திருமணம் தாமதம் ஆவது குறித்து கேள்வி எழுப்புவார். அதற்கு பதில் அளித்த அண்ணன், எனக்கு இப்போது 30 வயது.. என் தங்கைக்கு வயது 25 வயது. அவர் ஏற்கனவே கமிட் ஆனவர்.. எனக்கு வயது குறைவாக இருந்த போது என் திருமணத்தை பற்றி யாரும் யோசிக்கவில்லை.. நான் இதுவரை கமிட் ஆகவில்லை.. எனக்கே அதுபற்றி யோசனை இல்லை,.. என் குடும்பத்தைபற்றித்தான் யோசித்தபடி வாழ்ந்தேன்... எனக்கு அப்பா இல்லை.. 20 வயதில் இருந்தே என் குடும்பத்திற்காகவே வாழ்ந்து வருகிறேன் என்றார்..
அப்போது அந்த பெண், இதற்கு பிறகு நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கொள், இதன்பிறகு தம்பி இருக்கிறான்.. தங்கை இருக்கிறாள்.. குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. நீ உன் லைபை என்ஜாய் பண்ணு என்று கூறுகிறோம் என்பார்... அதற்கு கோபி.. ஏன் நீங்கள் அவரை சேர்த்துக் கொண்டே பண்ணலாமே.. ஏன் தனித்து போக சொல்கிறீர்கள் என்று கேட்டார்.. அப்போது பேசிய கோபிநாத், நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்திருக்கும்.. உங்களுக்கு உங்கள் அம்மா வேண்டும்.. அதற்கு இந்த அப்பாவியை திருமணம் செய்த தனியாக போகச்சொல்கிறீர்களே.. இது சரியா என்று கேட்டார்..
இதுபற்றி ஷீலா என்பவர் கூறுகையில், யார் யாரோ நம்மள யூஸ் பண்ணிக்கிறப்போ, சொந்த குடும்பம், தங்கச்சி தான யூஸ் பண்ணுது? பண்ணிட்டு போகட்டும். நல்லா இருந்தா சரின்னு கடந்து போக கத்துக்கோங்க, வேற வழி இல்ல.. என்று தன் கவலையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் நடக்குற எதார்த்தங்களை அடிக்கடி ட்விட்டர் பக்கம் கொண்டு வாங்கப்பா.. அப்பாவிகள் முழிச்சிக்கட்டும்.. என்று கூறியுள்ளார்.
இதுபற்றி வெற்றி என்பவர் கூறுகையில், " என்ன நடக்குதுனு யோசிக்க கூட விடாம ?? உங்களுக்கு என்ன வேணும் அவங்களும் யோசிக்காமல் ???அவர்களின் தேவைகளை உங்கள் மூலமாக நிறைவேற்ற துடிக்கும் சுயநலமான குடும்பத்தில் பிறந்த அனைத்து மூத்த பிள்ளைகளின் நிஜமான பிரதிபலிப்பு.. நிறைய ஆண் மகன்களின் வலி.. அனுபவிக்கிறவர்களுக்கு மட்டுமே புரியும்" என்றார்.
ஆனந்த் என்பவர் கூறுகையில், "ஆணாதிக்கம் பற்றி பேசும் நபர்கள் இல்லா வீடுகளில் ஆண்கள் தன் அக்கா தங்கைகளுக்காக திருமணத்தை தள்ளி போடுவதை பற்றி பேசுவதே இல்லை. இது கவனிக்கப்படாத ஏரியாவாகவே உள்ளது. தங்கை இருக்கையில் அண்ணனுக்கு திருமணம் என்றால் ஏதோ அவனை குற்றவாளி மாதிரி பார்க்கிறது சமூகம்" என்று கூறியுள்ளார்.
யார் யாரோ நம்மள use பண்ணிக்கிரப்போ, சொந்த குடும்பம், தங்கச்சி தான use பண்ணுது? பண்ணிட்டு போகட்டும்.நல்லா இருந்தா சரி னு கடந்து போக கத்துக்கோங்க, வேற வழி இல்ல.. 🥲
— Sheela🕊️ (@Sheela_Speakz) March 3, 2024
நடக்குற realitya சந்து பக்கம் அடிக்கடி கொண்டு வாங்கப்பா..
அப்பாவிகள் முழிச்சிக்கட்டும்..
pic.twitter.com/p1bBMbUdPC
முகமது இஸ்மாயில் என்பவர் அந்த வீடியோ குறித்து கூறுகையில், அம்மாவை திருமணத்திற்கு பிறகு தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் தன்னை தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று விரும்பிய தங்கை.. அண்ணணை திருமணம் செய்து தனியாக போ என்று மறைமுகமாக கூறி இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
டிகேஎஸ் என்பவர் கூறுகையில், "முன்ன பின்ன தெரியாதவன் ஏமாத்துறப்ப தாங்கிக்கிற மனசு, கூடவே இருக்கிறவுங்க ஏமாத்துறப்போ தாங்கிக்காதுங்க ... அதெல்லாம் அவ்ளோ சுலபமா கடந்து போக முடியாது.." என்றார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications