வேட்புமனு முதல் தற்போது வரை.. விஜய்யை கோர்த்துவிடும் முக்கிய நிர்வாகிகள்.. கொதிக்கும் தவெகவினர்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழு மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்த தவறுகள், அக்கட்சிக்கு தொடக்கம் முதலே பின்னடைவாக மாறி வருகிறது. ஆளுநர் அர்லேகரிடம் தவெக தரப்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய போது, தனிப் பெரும் கட்சி என்று அறிக்கை கொடுக்காமல், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் பட்டியலையும் சேர்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதே சிக்கலுக்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக 108 இடங்களில் வென்றுவிட்ட போதும், இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் திண்டாடி வருகிறது. ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் கோரிய போதும், அவர் இன்னும் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனிடையே ஆளுநர் அர்லேகரை விஜய் இன்று 2வது முறையாக சந்தித்துள்ளார்.

அப்போது தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் இல்லை. இதன் காரணமாகவே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என்று விஜய்யிடம் ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக விஜய் வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய போது, விஜய் தரப்பில் தனிப்பெரும் கட்சி என்று 108 எம்எல்ஏ-க்கள் பட்டியலை கொடுக்காமல், காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏ-க்களின் பட்டியலையும் கொடுத்திருக்கின்றனர். இதனால் கூட்டணி ஆட்சி என்றால், மீதமுள்ள 6 எம்எல்ஏ-க்களின் பட்டியல் எங்கே என்று ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
இதனால் தவெகவின் வழக்கறிஞர் குழு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இங்கு கூட்டணி ஆட்சி என்று அல்லாமல், தனிப்பெரும் கட்சி என்று உரிமை கோரி இருந்தால், பதவிப் பிரமானம் செய்யப்பட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் காலகெடு நிர்ணயம் செய்திருப்பார். ஆனால் கூட்டணி ஆட்சி என்று கூறியதால், இந்த சிக்கல் தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே விஜய்யின் வேட்புமனு தாக்கலின் போதும் குற்ற வழக்குகள் பின்னணி மற்றும் வயது ஆகியவற்றை மாற்றி மாற்றி நிரப்பி சிக்கலாகி இருந்தது. இதனால் விஜய் 2 தொகுதிகளிலும் 2 முறை கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார். இதனால் தவெக தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழுவை அக்கட்சியினரே சாட தொடங்கி இருக்கின்றனர்.
-
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications