பெரியார், அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்த விஜய்! அலங்கார வளைவின் டிசைனை பார்த்தீங்களா?
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ள நிலையில் அவர், பனையூரில் இன்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும் தலைவர்களின் சிலைகளையும் திறந்து வைத்தார்.
எல்லாவற்றுக்கும் மேல் இன்று விஜய் தனது சுற்றுப்பயண விவரத்தையும் அறிவிக்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவேன் என கூறிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கினார்.

அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்தார். மேலும் தங்கள் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். பிறகு அவர் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிரம்மாண்டமான மாநாட்டை விக்கிரவாண்டியில் தொடங்கி வைத்தார். அப்போது அவரது கட்சியின் கொள்கைகளையும் கொடிக்கான அர்த்தத்தையும் விளக்கியிருந்தார்.
அந்த வகையில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் அவ்வப்போது அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். நேற்று கூட பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் இல்லை என்பதை குறிப்பிட்டிருந்தார். அதே நேரம் வருமான வரி விலக்கை பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் இன்று விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றதுது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பிறகு கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாலத்திள் ஆகியோரின் சிலைகளையும் அவர் திறந்து வைத்தார். அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினார். சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு பின்னால் வாகை மலர் அலங்கார வளைவு போல் இடம்பெற்றுள்ளது.
பின்னர் மாணவர்களுக்கு மடிக்கணினி, உள்ளிட்ட நல திட்டங்களையும் வழங்குகிறார்.5ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் பட்டியலையும் அவர் வழங்குகிறார். விஜய்யை காண கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
-
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications