“சர்காரில் அம்மா லேப்டாப்பை உடைப்பது போல சீன்.. என்ன ஆச்சுன்னு தெரியுமில்ல விஜய்?”-ராஜன் செல்லப்பா
சென்னை: சர்க்கார் திரைப்படத்தில், ஜெயலலிதா கொடுத்த லேப்டாப்பை உடைப்பதை போன்ற சீன் வந்திருந்தபோது.. மதுரையில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட வேண்டாம் என அதிமுக எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா, விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலவசங்கள் அல்லது விலையில்லா நலத்திட்டங்கள் என்பது, மக்களை சோம்பேறிகளாக மாற்றுகிறது என்கிற மேல்தட்டு சிந்தனையை திரையில் கொண்டுவர முயன்றவர்களில் விஜய்யும் முக்கியமானவர். அப்படித்தான் சர்கார் திரைப்படத்தில் அரசு லேப்டாப்பை போட்டு உடைப்பதை போன்ற சீன் இருந்தது. இது கடும் எதிர்ப்புக்கு பின்னர் நீக்கப்பட்டது.

சர்கார் திரைப்படம்
இப்படி இருக்கையில், சமீபத்தில் அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு அதிமுகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வி.வி.ராஜன் செல்லப்பா, சர்க்கார் திரைப்படத்தில், ஜெயலலிதா கொடுத்த லேப்டாப்பை உடைப்பதை போன்ற சீன் வந்திருந்தபோது.. மதுரையில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட வேண்டாம் என விஜய்க்கு எச்சரித்துள்ளார்.
திட்டம் என்ன?
இது தொடர்பாக அவர் பேசியதாவது, "புதிய கட்சிக்காரர்களை கூட நான் விமர்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை நான் சொன்னதே கிடையாது. அண்ணா திமுகவை தொட்டுவிட்டார். இனி சும்மா இருக்க முடியாது என்கிற நிலை வந்துவிட்டது. நீங்கள் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறீர்கள். அப்படியெனில் நீங்கள் ஏதேனும் ஒரு திட்டத்தை சொல்ல வேண்டும் அல்லவா. எங்களுடைய கொள்கை இது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று சொல்லியிருக்க வேண்டும்.
படத்தை ஓட விடாமல் செய்தோம்
நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.. உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. சர்கார் என ஒரு திரைப்படம் வந்தது. அதில், அம்மா கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தில் வழங்கப்பட்ட லேப்டாப்பை போட்டு உடைத்தார்கள். இதனையடுத்து நாங்கள் அந்த படத்தை ஓட விடாமல் செய்தோம்" என்று கூறியுள்ளார்.
விஜய்க்கு வார்னிங்
இவ்வாறு பேசிய வீடியோவை பகிர்ந்த, ராஜன் செல்லப்பா.. "சர்க்கார் படம், அம்மா அவர்கள் வழங்கிய லேப்டாப் திட்டத்தை உடைப்பது போல் காட்சியுடன் வெளியான போது மதுரையில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட வேண்டாம்" என பதிவிட்டு விஜய்யை டேக் செய்து எச்சரித்துள்ளார்.
-
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications