இப்படியே போனீங்கன்னா.. கட்சியை கலைச்சிட்டு போக வேண்டியதுதான்.. கடுப்பில் கத்திய விஜய்.. ஏன்?
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதிகரித்து வரும் உட்கட்சிப் பிரச்சனைகளால் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் கட்சியை கலைக்க வேண்டியதுதான் என்று கட்சியின் டாப் நிர்வாகிகளிடம் அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் உள்வட்டாரத் தகவல்களின்படி, முக்கியத் தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே நிலவும் மோதல்கள் குறித்து விஜய் தனது கடும் அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தி இருக்கிறாராம்.

அரசியலுக்கு வந்ததிலிருந்து அமைதியான பிம்பத்தைப் பேணி வரும் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் அரசியல் ரீதியாக உடைந்து போய் இருக்கிறார். கரூர் விவாகரத்திற்கு பின் தவெகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன.
இதையடுத்தே விஜய் இவர்களிடம் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளே தொடர்ச்சியாக புறம்பேசுதல்களும், ஈகோ மோதல்களும் கட்சியின் பிம்பத்திற்கும், ஒற்றுமைக்கும் கேடு விளைவிப்பதாக சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் அவர் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
விஜய் திட்டவட்டமாக தெரிவிப்பு
உட்கட்சி அரசியலையும், தனிப்பட்ட பகையையும் தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற நடத்தைகள் தொடர்ந்தால், கட்சியே கலைக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை மூத்த உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது சூழ்நிலையின் தீவிரத்தைக் காட்டுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே நிலவும் மோதல்கள் குறித்து விஜய் தனது கடும் அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்தி.. நீங்கள் செய்வது கட்சிக்கு உதவாது.. மாறாக கட்சியை இன்னும் பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்று எச்சரித்து உள்ளாராம்.
புஸ்ஸி ஆனந்திடம் தனிப்பட்ட வகையில் கோபம்
இது போக புஸ்ஸி ஆனந்திடம் தனிப்பட்ட வகையில் அவர் சில வருத்தங்களை, கோபங்களை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. கட்சியில் யாருக்கு பவர் அதிகம், யார் நிர்வாகிகளுக்கு உத்தரவிடுவது, யார் கட்சி முடிவுகளை எடுப்பது என்ற விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. இவர்கள் மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கியப் பங்கு வகித்தாலும், அவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இது சில மாவட்ட நிர்வாகிங்கள் இடையிலும் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
சட்டசபை தேர்தல்
2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தனது களப் பணியை மேம்படுத்தவும், நம்பகமான வேட்பாளர்களை ஈர்க்கவும் தமிழக வெற்றிக் கழகம் முயற்சிக்கும் வேளையில் விஜயின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய கட்சிக்கு உட்கட்சி ஒற்றுமை அத்தியாவசியம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கட்சி இன்னும் ஆரம்பக் கட்ட அமைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது... இப்படிப்பட்ட நேரத்தில் உட்கட்சி மோதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.. அடிமட்ட அளவில் கட்சியில் ஒற்றுமை மேலும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications