தேர்தலுக்கு ஒரு வாரம் தான் இருக்கு.. வீட்டு வாசலில் விசில் கோலம் போடுங்க.. விஜய் கோரிக்கை!
சென்னை: சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று தமிழக சட்டசபை தேர்தலுக்கான முழுமையான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். அப்போது பேசிய விஜய் என் தொகுதிக்கு நானும் ஒரு எம்.எல்.ஏ தான்.. மாதம் ஒரு முறை உங்களை சந்திப்பேன் என்று கூறினார். மேலும் மக்களுக்கும் ஒரு கோரிக்கையினை வைத்தார். அதாவது ஒரு வாரம் தான் தேர்தலுக்கு இருக்கு.. எல்லாரும் வீட்டு விசில் கோலம் போடுமாறு விஜய் கோரிக்கை வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று முழு தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். அப்போது அவர் திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலின் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு 10 அம்ச வாக்குறுதிகளை விஜய் வாசித்தார். இதன்பிறகு பேசிய விஜய், திமுக மற்றும் பலர் உள்ள கட்சிகளின் தேர்தல் அறிக்கையினை பார்த்தீங்க என்றால் இரண்டிலும் ஒரே மாதிரியான தேர்தல் அறிக்கை தான் இருகும். பெயரை மாற்றி, கலரை மாற்றி கொடுத்து இருப்பார்கள். இவர்கள் இருவரும் வேறு வேறு இல்லை.. ஒரே குடையின் கீழ் இருக்கிற கொள்ளை கூட்டம்..
அவங்களை போல இல்லை.. ஸ்டாலின் சாரை போல இல்லை. இந்த விஜய்யை நீங்க நூறு சதவீதம் நம்பலாம். ஊழலற்ற ஆட்சியை தமிழக வெற்றிக் கழகம் நடத்தும். நான் என்னவாக இருந்தாலும் நானும் ஒரு வேட்பாளர் தான்.. எனது தொகுதி எம்எல்ஏ தான்.. உங்கள் வீட்டுப் பிள்ளை தானே.. எனவே என்னை நீங்கள் எப்போதும் மிக எளிதாக என்னை சந்திக்கலாம்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு எப்போதும் எனக்கு நெருக்கமான தொகுதிகளாக தான் இருக்கும். மாதா மாதம் தொகுதிக்கு வந்து உங்களை சந்திப்பேன்.. என்னை சந்திப்பது கடினமாக இருக்கும் என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம்.. மக்களின் வரிப்பணத்தை ஒரு பைசா கூட தொட மாட்டேன்.. பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விடமாட்டோம்.. பலரை போல அள்ளிவிடும் அறிக்கையில்லை இது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய விஜய், "உங்கள் எல்லாருக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. அம்மா, அக்கா, தங்கைகள் எல்லாருக்குமே என் சைடில் இருந்து ஒரு சின்ன கோரிக்கை.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு தேர்தலுக்கு.. நீங்க எல்லாரும் எனக்காக உங்க வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போடுங்க.. அது விஜய்க்கு நீங்க செய்யுற, விஜய்க்கு நீங்க கொடுக்குற பெரிய ஆதரவாக இருக்கும்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்" என்று கூறினார்.
-
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?











Click it and Unblock the Notifications