விஜய் வெற்றிக்கு தோனி காரணமாம்.. இது என்ன புதுசா இருக்கு.! நெட்டிசன்கள் சொல்வதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சி வெற்றி பெற்றதை அவரது கட்சியினர் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். அதேநேரம் தவெக வெற்றிக்கு தோனிக்கும் முக்கிய பங்கு இருப்பதாகவும் நம்மால் ட்வீட்களை பார்க்க முடிகிறது. தோனிக்கும் தவெகவுக்கும் அப்படி என்ன தொடர்பு.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்களைத் தேவைப்படும் சூழலில், அதற்கான முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ipl TVK Vijay

தோனி

நெட்டிசன்கள் விஜய்யின் வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில், சில வினோதமான ஒப்பீடுகளையும் பார்க்க முடிகிறது. அப்படி தான் சிலர் விஜய்யின் இந்த வெற்றியை சிஎஸ்கேவின் 'யெல்லோ வேவ்' உடன் ஒப்பிட்டு வருகிறார்கள். மேலும், விஜய்யின் வெற்றிக்கு தோனி தான் காரணம் என்றும் தலா தான் ரீசன் என்றும் ஜாலியாக சொல்லி வருகிறார்கள்.

விசில்

அதாவது தவெகவின் 'விசில்' சின்னம், சென்னை சூப்பர் கிங்ஸின் "விசில் போடு" கீதத்துடன் இயல்பாகவே பொருந்திப் போனது. சிஎஸ்கே ரசிகர்களுக்கு 'தல' தோனி எப்படி ஒரு சிறந்த 'ஃபினிஷரோ', அதேபோல அரசியல் களத்தில் விஜய் ஒரு சிறந்த 'ஃபினிஷராக' தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.. குறிப்பாக, 100 இடங்களைக் கடந்த விஜய்யின் அதிரடி, கடைசி ஓவரில் தோனி அடிக்கும் சிக்ஸர்களைப் போலவே இருந்ததாக இணையத்தில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.

சிஎஸ்கே தல தோனி என்றாலே பல இளம் ரசிகர்களுக்கு விசில் போடு தான் நினைவுக்கு வரும். விசில் சின்னம் மிக எளிதாக இளம் தலைமுறையினரிடம் சென்று சேர தோனியும் காரணம் என்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். இதையெல்லாம் சுற்றி வளைத்துப் போட்டுத் தான் தலை பார் ரீசன் ட்வீட்களை பார்க்க முடிகிறது.

விஜய்க்கு உள்ள சிக்கல்

தவெக தனிப்பெரும் கட்சி என்பது உறுதியானாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை தொட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள சூழலில், விஜய் ஒரு மைனாரிட்டி அரசை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்படி வேறு சிறிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைத்தால் 100க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டுள்ள திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்களை விஜய் சட்டசபையில் சமாளிக்க வேண்டி இருக்கும்.

தற்போதைய சூழலில் 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணிக்கு விஜய் அழைக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

சூப்பர் ஓவர்

விஜய்யைப் பொறுத்தவரை இது ஒரு 'சூப்பர் ஓவர்' நிலைதான். 108 ரன்கள் எடுத்துவிட்டாலும், வெற்றிக் கோட்டைத் தொடத் தேவையான அந்த 10 ரன்களை (இடங்களை) எடுத்தாக வேண்டும். அதற்கு அவர் எத்தகைய அரசியல் ராஜதந்திரங்களைக் கையாளப் போகிறார் என்பதே இப்போதைய மிக பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய் 108 இடங்களில் வென்றார். திமுக 59 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. அதிமுகவானது 48 இடங்களில் மட்டுமே வென்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+