இதுக்கு பெயர்தான் மத்திய அரசுடன் இணக்கமா போறதா.. அமித்ஷாவை வரவேற்க விஜய் வந்ததன் நோக்கம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மண்டல முதல்வர்களின் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது, அவரை அமைச்சர்கள் சென்று வரவேற்பார்கள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் முதல்வர் விஜய் முன் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலமாகவே மத்திய அரசுடன் இணக்கமான போக்கில் இருப்போம் என்று காட்டும் வகையில் விஜய் செயல்பட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்போம் என்று கூறி வருகிறது. முதல்வர் விஜய்யும் ஒவ்வொரு மேடைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதேபோல் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று பேசி வருகிறார். இதனை பாஜகவினரும் வரவேற்றனர்.

Amit Shah

அதற்கேற்ப டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற லோக் ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று இருந்தார். இருப்பினும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை விஜய்யால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் கோவளத்தில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. 4 மாநில முதல்வர்கள், தெலங்கானா துணை முதல்வர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க நேற்றிரவு அமித்ஷா சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக அரசு அதிகாரிகளும், பாஜக நிர்வாகிகளும் வரவேற்றனர். இதன்பின் கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அமித்ஷா வந்தார். அப்போது முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வரவேற்றனர்.

முதல்வர் விஜய் வரவேற்றதை அமித்ஷாவும் எதிர்பார்க்கவில்லை என்று அக்கட்சியினர் சொல்லுகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்கையில், அமித்ஷாவை வரவேற்க முதலில் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை அனுப்பவே திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக இணக்கமான போக்கை கடைபிடிப்போம் என்று விஜய் கூறி இருந்திருக்கிறார்.

இதனால் கடைசி நிமிடத்தில் விஜய் நேரடியாக வரவேற்க வந்தது தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக டெல்லியின் கோபத்திற்கும் ஆளாக தேவையில்லை என்ற எண்ணமும் தவெக தலைமை மத்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் மாநாட்டில் அமித்ஷா முன் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய் பல்டி அடித்தது ஏன் என்ற கேள்வியே தவெகவினர் மத்தியில் விவாதமாக இருக்கிறது.

இதனால் பெரும்பான்மை இல்லாததால் தவெகவும் அரசியல் ரீதியாக இணக்கமான போக்கை கடைபிடிக்க முடிவு செய்துவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நேற்றிரவு அமித்ஷாவுடன் சில நிமிடங்கள் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு என்று பிரத்யேகமாக வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தவெக - பாஜக இடையில் உறவு உருவாகி இருக்கிறதா என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+