திமுக எதிர்ப்பு வாக்குகள் மட்டுமல்ல.. விஜய்யின் ஆதரவு பட்டியலை பாருங்க.. சொல்வது பத்திரிகையாளர் மணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதால், அது திமுகவுக்கு சாதகமாக மாறி இருப்பதாக சி வோட்டர் மற்றும் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் மணி, விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டும் பிரிக்கவில்லை. முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகளையும் பிரிக்கிறார் என்று கூறியுள்ளார்.

2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 36 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என்று கணித்துள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 52ல் இருந்து 48 சதவிகிதமாக குறைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

Vijay vs DMK

அதேபோல் விஜய்யின் வருகையால், திமுக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் பிரியும் சூழல் உருவாகி இருக்கிறது. இது திமுகவுக்கு மறைமுகமாக பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு தொடர்பாக பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி பத்திரிகையாளர் மணி பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலை விஜய்யின் வருகை மொத்தமாக மாற்றி இருக்கிறது. 2019, 2021, 2024 தேர்தலில் திமுக அடைந்த வெற்றியை போல் எளிதாக 2026ல் வென்றுவிட முடியாது. 2006ல் விஜயகாந்த் வரவில்லை என்றால் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் விஜயகாந்த் வாங்கிய 8.9 சதவிகித வாக்குகள் திமுகவை சிக்கலுக்கு உள்ளாக்கியது.

ஒரு அழகான பழமொழி உள்ளது. வரலாறு மீண்டும் நிகழும்.. முதல்முறை நிகழும் போது துன்பியல் நாடகமாக இருக்கும்.. அடுத்த முறை நிகழும் போது கேலிக்கூத்தாக இருக்கும். 2006ல் நடந்தது துன்பியல் நாடகம். இம்முறை கேலிக்கூத்தாக வாய்ப்பு உள்ளது. திமுக 2வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

திமுகவில் விவரம் அறிந்தவர்கள் பலருக்கும் நன்றாக தெரியும்.. விஜய் வெறும் திமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டும் பிரிக்கப் போவதில்லை என்று.. ஏனென்றால் விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகள், இளைஞர்கள் வாக்குகள், பெண்கள் வாக்குகள், 18 முதல் 35 வயதிற்குள் இருப்போரின் வாக்குகள், திமுக மற்றும் அதிமுகவை பிடிக்காதவர்களின் வாக்குகளை பிரிக்க போகிறார்.

எனக்கு தெரிந்தவரை 15 சதவிகிதம் வரை விஜய் வாக்குகள் பெறுவார் என்று கருதுகிறேன். இன்னும் அவர் தீவிர அரசியலுக்குள் வரவில்லை. அப்படி வந்தால், அவரின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். இதனால் விஜய்யை கண்டு திமுகவினர் தான் அதிக அச்சத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+