"அண்ணாமலைக்கு" ஆதரவு.. ஆனா பாஜகவுக்கு ஆதரவு இல்லை.. என்ன குழப்புறாரா தேமுதிக விஜய பிரபாகரன்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்திற்கு எங்கள் ஆதரவு உள்ளதே தவிர பாஜகவுக்கு இல்லை என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என திமுக அறிவித்ததை போல் வழங்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திமுகவை கண்டித்து தேமுதிகவினர் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன் பேசுகையில் தேர்தல் வாக்குறுதிகளின்படி புகார் பெட்டி வைக்கவில்லை. அப்படி வைத்தால் மொத்த புகாரும் திமுக மீதுதான் இருக்கும். அதனால்தான் வைக்கவில்லை என நினைக்கிறேன்.
நேரமே இல்லை என கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் 4 மணி நேரம் ஐபிஎல் மேட்ச் பார்க்கிறார். உதயநிதி நடிப்பதும் நடிக்காமல் இருப்பதும் அவரது இஷ்டம். ஆனால் அவர் விளையாட்டுத் துறைக்காக என்ன செய்திருக்கிறார். திமுக போட்டோஷூட் ஆட்சி நடத்தி வருகிறது. சொந்த பணத்தை மக்களுக்காக செலவிட்ட ஒரே கட்சி தேமுதிகதான்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் கூட்டணியின போது தேமுதிகவை சுற்றி ஒரு சின்ன அரசியல் நடக்கிறது. குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான். அப்பா ஓய்வெடுக்கட்டும். அவரது பணியை நாம் செய்வோம். அப்பாவின் கனவை நிறைவேற்ற இங்கு வந்துள்ளேன். அமலாக்கத் துறை காரணமில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டார்கள்.
மொத்த திமுக குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள். தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்போம். மணிப்பூர் பிரச்சினையில் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கு முற்றிலும் பாஜகவை குறை சொல்ல முடியாது. அதற்காக நான் பாஜகவை ஆதரித்து பேசவில்லை.
மணிப்பூர் பிரச்சினைக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அண்ணாமலை நடைப்பயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் தேமுதிக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் அந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டார். அதற்காக பாஜகவிற்கு நாங்கள் ஆதரவு என்ற அர்த்தம் இல்லை. இவ்வாறு விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications