விஜயதரணி வைத்த முக்கிய டிமாண்ட்! சிரித்துக் கொண்டே Definitely சொன்ன சோனியா! முழு விவரம்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் என சோனியா காந்தியிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார் விஜயதரணி எம்.எல்.ஏ.
விஜயதரணி கோரிக்கை: விஜயதரணியின் கோரிக்கையை கூர்ந்து கவனித்த சோனியா காந்தி, சிரித்த முகத்துடன் Definitely என பதில் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்ல தாமும் காங்கிரஸ் தலைவராக இருந்ததை சுட்டிக்காட்டி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக கொண்டு வர வேண்டும் என சோனியாவிடம் விஜயதரணி கூறிய போது அங்கிருந்த கே.எஸ்.அழகிரி ஜெர்க் ஆகியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி ஜெர்க்: இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். எதிர்ப்பு ஒரு பக்கம் இரண்டு பக்கம் இருந்து வந்தால் பரவாயில்லை, சோனியா முன்னிலையில் தனக்கு எதிராக நாலா பக்கமும் வந்த எதிர்ப்புகளை கண்டு கே.எஸ்.அழகிரி மனம் வெதும்பிவிட்டார். பீட்டர் அல்போன்ஸ், சிடி மெய்யப்பன் போன்றோர் தமிழகத்தில் அமைப்பையே அடியோடு மாற்றியமைக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார்கள்.
தங்கபாலு -ஈவிகேஎஸ் : தங்கபாலு உட்கட்சி பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிசி கணக்கெடுப்பு பற்றி பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். அதே போல் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஏதாவது சூடாக பேசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என சோனியாவிடம் அழகிரி குறித்து சூசகமாக புகார் அளித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.
சோனியா ஆர்வம்: அதே போல் தமிழ்நாட்டில் காலியாக உள்ள கட்சி பதவியிடங்களை கால தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை பரவலாக முன் வைத்திருக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சென்னையில் சந்தித்த சோனியா, யாரையும் தடுக்காமல் எல்லோரையும் பேச விட்டு அவர்கள் மனதில் என்னதான் உள்ளது என்பதை அறிந்துக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார்ந.
கடும் போட்டி: தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் நாடாளுமன்றத் தேர்தல் வரை வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், ஒருவேளை விஜயதரணி உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்குமாறு கார்கேவிடம் சோனியா பரிந்துரைத்தால், தலைவர் பதவியை கைப்பற்ற விஜயதரணி, ஜோதிமணி இடையே போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications