இது என்ன புது வேஷம்.. எதற்காக இந்த முண்டாசு.. விளக்குகிறார் விஜயதாரணி
சென்னை: காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் நண்பன் என்பதை காட்டுவதற்காகவும் கருப்புச் சட்டங்கள் வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் தலையில் பச்சை முண்டாசை கட்டியிருந்தோம் என காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். சட்டசபைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலையில் பச்சை நிறத்தில் துண்டை முண்டாசு போல் கட்டிக் கொண்டு வந்திருந்தனர்.
இதுகுறித்து விஜயதாரணி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தலையில் முண்டாசு எதற்கென கேட்கிறீர்கள். இந்த வேஷம் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பச்சை துண்டு
இது ஏன் என்பது உங்கள் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். குறிப்பாக இந்த பச்சை துண்டை அணிவது விவசாயிகள்தான். இந்த விவசாய சட்டங்கள் இந்த நாட்டிற்கு எத்தனை விரோதமாக இருக்கிறது?

உணவுக் கழகம் மூடல்
இந்த சட்டத்தால் ஆதார விலையை இழந்துள்ளோம். தமிழகத்தில் இருக்கும் இலவச அரிசி திட்டம் கைவிட கூடிய சூழல் இந்த வேளாண் சட்டங்களால் ஏற்படும். அது போல் அத்தியாவசிய பொருட்களை கார்பரேட் கையில் ஒப்படைப்பது, உணவுக் கழகத்தை மூடும் நிலை உள்ளிட்டவை ஏற்படும்.

விவசாயிகளின் நண்பன்
இது நிறைய சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும். இதை எடுத்துரைப்பதற்காகத்தான் நாங்கள் ஆளுநர் உரையை புறக்கணித்தோம். காங்கிரஸ் கட்சி தலையில் பச்சை துண்டை முண்டாசு போல் கட்டியதே எங்கள் கட்சி விவசாயிகளின் நண்பன் என காண்பிப்பதற்காகவே!
போராட்டம்
இந்த துண்டை கட்டிக் கொண்டுதான் சட்டசபையில் உட்கார்ந்திருந்தோம். சட்டசபையை புறக்கணிப்பும் செய்தோம். விவசாயிகளுக்கான போராட்டம் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும். இந்த கருப்புச் சட்டங்கள் வாபஸ் பெற வேண்டும். அதற்காகத்தான் இந்த போராட்டமே தவிர, இது வேஷம் அல்ல. விஷயம் இருக்கிறது என்றார் விஜயதாரணி.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications