சளி -இருமல் தானே தவிர பயப்பட ஒன்றுமில்லை! விஜயகாந்த் ஹெல்த் அப்டேட்! தேமுதிக தொண்டர்கள் நிம்மதி!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென நேற்றிரவு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது.
விஜயகாந்த் உடல்நலம்: விஜயகாந்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாவே நடையிலும் பேச்சிலும் ஏற்பட்டுள்ள சிரமத்தால் வீட்டில் முழுமையாக ஓய்வில் இருந்து வருகிறார். அவரை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகிய இருவரும் மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.

சளி -இருமல்: இந்நிலையில் நேற்றிரவு விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணம் அவருக்கு ஏற்பட்ட சளி மற்றும் இருமல் பிரச்சனையே எனத் தெரிவிக்கப்படுகிறது. சளி, இருமல் காரணமாக தான் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் இப்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே விஜயகாந்த் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஹெல்த் அப்டேட்: வழக்கமான மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டுள்ளதால் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் எனத் தெரிகிறது. விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி வெளியானது முதல் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் உடலுக்கு என்னாச்சு என தவித்து போய்விட்டனர். விஜயகாந்திற்கு பதில் அவரது மூத்த மகனும், பிரேமலதா விஜயகாந்தும் தான் கட்சியினர் இல்ல நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
எப்போது டிஸ்சார்ஜ்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கூட விஜயகாந்த் தான் அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வருகிறார். இந்தச் சூழலில் விஜயகாந்துக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு மருத்துவர்கள் குழுவும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications