குவியும் மக்கள்.. சென்னை தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்.. இறுதி ஊர்வலத்தின் ரூட் இதுதான்
சென்னை: இடநெருக்கடி காரணமாக நடிகரும், தேமுதிகவின் நிறுவன தலைவருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் நாளை இறுதி ஊர்வலம் நடக்கும் ரூட் விபரம் வெளியாகி உள்ளது.
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் விஜயகாந்த். தேமுதிகவின் நிறுவன தலைவரான இவர் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் ஏராளமானவர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த கூடி வருகின்றனர்.
இதனால் நேரம் செல்ல செல்ல தேமுதிக அலுவலகத்தில் கூட்டம் என்பது அதிகரித்து வருகிறது. அதிகளவில் மக்கள் கூட அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. விஜயகாந்தின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. இதையடுத்து அங்கு வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பிறகு மதியம் 1 மணிக்கு விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகம் எடுத்து வரப்பட உள்ளது. இதையடுத்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை 1.10 மணிக்கு மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications