கேப்டன் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றவில்லை.. அவருடனே இருக்கட்டும்.. பிரேமலதா உருக்கம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் அணிந்திருந்த கட்சி மோதிரம் அவர் கையிலேயே இருக்கட்டும் என்று, அந்த மோதிரத்துடனும், கட்சி வேட்டியுடனும் அவரை அடக்கம் செய்துள்ளோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்காக 50 கிலோ எடை கொண்ட பிரத்யேக சந்தனப் பேழை தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது. நல்லடக்கம் நல்ல முறையில் நடைபெற்ற பின்னர், பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி. அமைச்சர் எவ வேலுவுக்கு நன்றி. கேப்டனின் இறுதிப்பயணம் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து காவல்துறையினருக்கும் கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் ராயல் சல்யூட். 2 நாட்களாக கூடவே இருந்து அனைத்து செய்திகளையும் ஒளிபரப்பிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. 2 நாட்களாக கேப்டனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.
தீவுத்திடல் முதல் கோயம்பேடு வரை 14 கி.மீ தூரத்திற்கு ஊர்வலமாக வர ஏறக்குறைய 3 மணி நேரம் எடுத்துக்கொண்டது. வழிநெடுக கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றிகளை உரித்தாக்குகிறேன். இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம் கேப்டன் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
நமக்கு கிடைத்துள்ள புள்ளி விவரப்படி, கடந்த 2 நாட்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கேப்டனுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு உணர்வுப்பூர்வமான அன்பை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. கேப்டனின் அன்பும், கேப்டனின் தர்மமும், அவரது நல்ல எண்ணமும், அவரது உதவி செய்யும் குணமும் தான் இன்று ஒட்டுமொத்த மக்களும் தெருவில் வந்து நின்று அஞ்சலி செலுத்தியது.
மலர் தூவி அவரை சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய அளவுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் எல்லோரையும் இறுதிச் சடங்கிற்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், உங்கள் எல்லோருக்கும் தெரியும், இது சிறிய இடம். முதல்வர், அமைச்சர்கள், விஐபிகள் பலரும் வந்திருந்தார்கள். நிகழ்வில் பங்கேற்ற அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் நன்றி.
அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் நடைபெற்றுள்ளது. கேப்டனை சந்தனப் பேழையில் வைத்து சிறப்பான முறையில் அடக்கம் செய்துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். கேப்டன் கட்சி மோதிரம் போட்டிருப்பார், அது அவர் கையிலேயே இருக்கட்டும் என்று, அந்த மோதிரத்துடனும், கட்சி வேட்டியுடனும் அவரை அடக்கம் செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications